ஆட்சியாளர்களின் வண்டவாளங்கள் வெளிவரும் என்பதாலே இறைமையை கையிலெடுக்க முனைகின்றனர். ஞா. சிறிநேசன்.
ஆட்சியாளர்களின் வண்டவாளங்கள் வெளிவரும் என்பதாலே இறைமையை கையிலெடுக்க முனைகின்றனர். என இணையம் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிகள் சந்திப்பு இடம்பெற்றபோது பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கருத்துரைக்கையில்;
சட்டைகள் மாறினாலும் அதிகார வர்கக்கங்கள் தங்களது வண்டவாளங்களை பாதுகாத்து கொள்வதற்கும் தாங்கள் நினைத்தபடி ஆட்சி செய்வதற்கும் இந்த பயங்கரவாத சட்டங்களை கொண்டு சனநாயகத்தினுள் குந்தகத்தினை ஏற்படுத்த முனைகின்றனர்.
பயங்கரவாத தடுப்புச்சட்டங்களினால் எமது சிறுபான்மையினம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதென்பது வெளிப்படையான உண்மை. எந்த வகையிலும் எந்த சலுகைகளுக்கும் விலைபோகாமல் இந்த பயங்கரவாத சட்டங்களை எதிர்த்து நிற்போம் என்பதனை வெளிப்படையாக கூறிக்கொள்கின்றோம்.
பயங்கரவாத தடுப்புச்சட்டமாக இருந்தால் என்ன? பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமாக இருந்தால் என்ன ? கிள்ளு கீரைகளாக பலிபீடத்தில் அமர்த்தப்படுவது எமது மக்கள்தான்.
பயங்கரவாத எதிர்ப்பு,தடுப்பு சட்டங்களின் அம்சங்கள் அதிகார வர்க்கங்கள் தங்களுடைய இறைமையை நாட்டின் இறைமை என சொல்லிக்கொண்டு அதிகாரவர்க்கங்கள் தாங்கள் நிலைத்து நிற்பதற்கு பயன்படுத்தும் மாய வித்தைதான் இறைமை.
அதிகாரவர்கங்களின் இறைமையைவிட எங்களுக்கு எமது மக்களின் உரிமைகளே முக்கியமானது. மக்களின் உரிமையை துவம்சம் செய்துவிட்டு, அடிமைகளாக்கிவிட்டு அதிகாரவர்க்கம் இறைமை என்கின்ற சுவையை சுவைப்பததை நாங்கள் அனுமதிக்க முடியாது.
கடந்த அரசியல் சூழ்ச்சியின் போது ஜே.வி.பி கட்டிசியினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தோம்.
அரசியல் சதி நாடகம் நடந்தபோது நாங்கள் அதற்கு விலைபோகாமல் சூழ்ச்சிகளை முறியடிப்பதற்காக முதலாவது வழக்கினை தாக்கல் செய்தது எமது கௌரவ இரா.சம்பந்தன் ஐயா அவர்கள்தான்.
நாட்டிலே சர்வாதிகார அரசு ஒன்று ஆட்சிபீடம் ஏறிவிட கூடாது என்பற்காகவே அரசியல் சதி முயற்சியை தோற்கடிக்க நாங்கள் நீதிமன்றத்தின் கதவினை தட்டினோம்.
சர்வாதிகார அரசு நாட்டில் ஏற்பட்டிருக்குமாயின் மீண்டும் 19ம் திருத்த சட்டத்தினை தூக்கி வீசிவிட்டு அவர்களுக்கு இயல்பான சட்டங்களை கொண்டு சனநாயகத்தினுள் சர்வாதிகாரத்தினை திணிக்கும் ஒரு நிலைப்பாட்டினை தோற்றுவித்திருக்கும்.
நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடார்த்திய போதும் நாங்கள் சனநாயகத்தின் பக்கமாக நின்று விளங்க வேண்டும்,சட்டத்தினை பாதுக்க வேண்டும்,நீதித்துறை சுதந்திரம் பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வலுவாக நின்றோம் வெற்றிபெற்றோம் தோற்கத்தோம்.
குறிப்பாக மலையக கட்சிகள், முஸ்லிம் கட்சிகள்,வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் சிறுபான்மை கட்சிகள் என்ற சிந்தனையில் சதியினை எதிர்த்து முறியடித்தோம்.
இது போன்றுதான் கொடுமைகள் நிறைந்த பயங்கரவாததடுப்புச்சட்டங்கள் சட்டையை மாற்றிவிட்டு பயங்கரவாத எதிர்பு சட்டமாக பெயர்பெற்று வந்தாலும் நாம் ஓரணியில் எதிர்க்க வேண்டும்.
இப்படியான சுழ்ச்சிகள் நிறைந்த பயங்கரவாத எதிப்பு,தடுப்பு சட்டங்களை நாங்கள் வெளிப்படையாக எதிர்த்து நிற்போம் என கூறிக்கொள்கின்றோம்.
பயங்கரவாத சட்டங்களால் எமது பெண்கள் வாயால் சொன்ன கொடுமைகள் சில ஆனால் சொல்லமுடியாத துயரங்கள் பல.
ஒரு பெண் பயங்கரவாத சட்டங்களினால் கைது செய்யப்பட்டால் என்ன நடக்கும், ஆண் கைது செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்பவற்றை ஊடகங்கள் வாயிலா நாம் அறிந்துவைத்துள்ளோம்.
கடந்த காலங்களில் பயங்கரவாத சட்டங்களினால் குட்டிமணி, ஜெகன்,தங்கத்துரை என்பவர்களை தலைகீழாக கட்டி வைத்து மிளகாய் பொடியினை சுவாசிக்க வைத்து ஒப்புதல் வாக்குமூலங்களை பெற்று மரணதண்டனை வழங்கப்பட்டதை நாம் அறிவோம்.
நாட்டிற்கே ஏன் மனித குலத்திற்கே அவமான சின்னமாக இருக்கின்ற பயங்கரவாத தடுப்பு,எதிர்ப்புச்சட்டங்களை எதிர்த்து செயற்படுவோம்.
இது ஐக்கிய தேசிய கட்சியாக இருந்தாலும் சரி பொதுஜன ஐக்கிய முன்னணியாக இருந்தாலும்,பொதுஜன பெரமுன கட்சியானாலும் எதிர்த்து செயற்படுவோம்.
அரசியல் சட்டங்கள் கேலிக்கூத்தாக மாறிவிடக்கூடாதென்பதற்காக நாங்கள் சிறுபான்மை கட்சிகள் நியாயமானதும்,நீதியுமான முறையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக நின்றோம். என சிறுபான்மை கட்சிகளின் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இந்த ஒருங்கிணைப்பு நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் கி. துரைராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ,எகேட் நிறுவன பிரதிநிகள்,சமூக அமைப்புகள், சர்வமத தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.