93 ஓட்டத்துக்குள் சுருண்டது இந்தியா ; எளிதாக பதிலடி கொடுத்த நியூஸிலாந்து
இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியுள்ளது.
நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நியூஸிலாந்து கிரிக்கெட் அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றிய நிலையில், நான்காவது ஒரு நாள் போட்டி எமில்டனில் இன்று தொடங்கியது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன், இந்திய அணியை துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
இப் போட்டியில் தோனி, விராட் கோலி விளையாடாத நிலையில் தலைவராக ரோகித் சர்மா வழி நடத்தினார். இது இவரின் 200 ஆவது ஒருநாள் போட்டியாகும்.
ஆரம்ப வீரர்களாக ரோகித் (7), சர்மா மற்றும் தவான் (13) இருவரும் டிரென்ட் போல்ட், கிராண்ட்ஹோம் ஆகியோரின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் களமிறங்கிய இளம் வீரர் சுப்மான் கில் 9 ஓட்டத்துடனும், கேதர் ஜாதவ் ஒரு ஓட்டத்தையும் எடுத்த நிலையில், போல்ட்டிடம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 39 ஓட்டங்களை பெற்றருந்தது.
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காத காரணத்தினால் இந்திய அணி இறுதியாக 30.5 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 93 ஓட்டங்களை பெற்றது.
நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன் கிராண்ட்ஹோம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 93 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 14.4 ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் இந்திய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது.
நியூஸிலாந்து அணி சார்பில் மார்டீன் குப்டீல் 14 ஓட்டத்தையும், ஹென்றி நிக்கோலஷ் 30 ஓட்டத்தையும் பெற்றதுடன், கேன் வில்லியம்சன் 11 ஓட்டத்தையும், ரோஷ் டெய்லர் 37 ஓட்டத்தையும் ஆட்டமிழக்காது பெற்றனர்.