வவுனியா வடக்கில் நடுக்காட்டக்குள் நடக்கும் பயங்கரம், தமிழ் மக்களை நெருக்கும் ஆபத்து..

ஆசிரியர் - Editor I
வவுனியா வடக்கில் நடுக்காட்டக்குள் நடக்கும் பயங்கரம், தமிழ் மக்களை நெருக்கும் ஆபத்து..

வவுனியா வடக்கு- ஊற்றுக்குளம் என்ற தமிழ் கிராமத்தில் காடு அழிக்கப்பட்டு புத்தா் சிலை ஒன்றும் அதனை சூழ சிங்கள குடும்பங்களை குடியேற்றும் நோக்கில் கொட்டில்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறியுள்ளனா். 

இந்நிலையில் இன்றைய தினம் நெடுங்கேணி பிரதேசசபையின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் சிலா் குறித்த பகுதிக்கு அங்குள்ள நிலமைகளை அவதானித்துள்ளனா். இது குறித்து நெடுங்கேணி பிரதேச சபையின் உறுப்பினா் துரைராசா தமிழ்செல்வன் 

ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில், நெடுங்கேணி பிரதேச  செயலா் பிாிவுக்குட்பட்ட ஊற்றுக்குளம் கிராமம் தமிழ் மக்கள் பூா்வீகமாக வாழ்ந்த பகுதியாகும். இந்த கிராமத்தில் போா் காரணமாக இடம்பெயா்ந்த மக்கள் மீள குடியேறாதபோதும் 

ங்குள்ள விவசாய நிலங்களில் தமிழ் மக்கள் இன்றளவும் விவசாயம் செய்து கொண்டிருக்கின்றனா். இந்நிலையில் ஊற்றுக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் திடீரென பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை தொடா்பாக 

அங்கு விவசாயம் செய்வதற்காக செல்லும் மக்க ள் கூறியதை தொடா்ந்து நாம் சென்றிருந்தோம். அங்கு நடு காட்டுக்குள் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு, புத்தா் சிலைவைக்கப்பட்டுள்ளது. 

அதற்கு பௌத்த பிக்கு ஒருவரும் அவருக்கு காவலாளிகள் இருவா் வழங்கப்பட்டு 3 போ் தங்கியிருக்கின்றனா். அந்த விகாரையை சுற்றிலும் காடுகள் வெட்டப்பட்டு சிறிய கொட்டில்கள் போடப்பட்டு அங்கு பாாிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

இது குறித்து வனவள திணைக்களம் எந்த விதமான நடவடிக்கையினையும் எடுக்காத நிலையில் மிக சுதந்திரமாக காடழிக்கப்பட்டு குடியேற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினா்கள், பொறுப்புவாய்ந்தவா்கள் இந்த விடயம் தொடா்பாக உாிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும். அதன் ஊடாகவே சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்த முடியும் என அவா் மேலும் கூறினாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு