காங்கேசன்துறை துறைமுகம் 45.27 மில்லியனில் புனரமைப்பு. ஆரம்பித்துவைக்கிறார் பிரதமர்..
இந்தியாவின் நிதி உதவியுடன் காங்கேசன்துறை துறைமுகம் 45.27 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் அபிவிருத்தித் திட்டம் அடுத்த மாதம் முதல்வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த அபிவிருத்தி பணியினை பிரதமர் ரணில் விக்கிமரசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்தியாவின் 45.27 மில்லியன் டொலர் நிதியுதவியில் ஆரம்பிக்கப்படும் இந்த திட்டம் மூன்று ஆண்டுகளில் நிறைவடையவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் போக்குவரத்து மற்றும் சரக்குகளைக் கையாளக் கூடிய துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் வகையில் காங்கேசன்துறை துறைமுகத்தினது அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் இத்திட்டம் குறித்து வெளியிட்ட அமைச்சர் இத்திட்டத்தில் அனைத்துக் கப்பல்களும் வரக் கூடிய வகையில், துறைமுகப்பகுதி 9 மீற்றர் வரை ஆழமாக்கப்படவுள்ளதுடன், தற்போதுள்ள அலைதாங்கி முற்றிலுமாக மாற்றியமைக்கப்படவுள்ளது.
தற்போதுள்ள ஒரு இறங்குதுறை முழுமையாக சீரமைக்கப்படும் அத்துடன் ஒருபுதிய இறங்க்குதுறையும் காங்கேசன்துறை துறைமுக சுற்றுபுறத்தில் 15 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகளை துறைமுக அதிகார சபை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.
அடுத்தகட்டமாக 50 ஏக்கர் பரப்பளவுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதற்கான திட்டமிடல் செயல்முறைகளுக்கான ஆலாசகர்களை நியமிக்கும் நடவடிக்கை துறைமுக அதிகார சபை ஆரம்பித்துள்ளது. 2020 இறுதிக்குள் திட்டம் முழுமையாக நிறைவடையும் எனம் அமைச்சர் சாகலநம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் யாழ் மற்றும் வடமாகாண வர்த்தகர்கள் மிகவும் பயன் பெறக்கூடிய நிலை காணப்படும். மேலும் வடமாகாணத்தில் பொருட்களின் விலைவீழ்ச்சி ஏற்படும் எனவும் இதனால் பொதுமக்கள் மிகவும் பயனடைவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.