கஞ்சா விற்பனையாளர்களை காட்டிக் கொடுத்த மாணவன் மீது தாக்குதல்..
கிளிநொச்சியில் இடம்பெறும் போதை பொருள் விற்பனை தொடர்பிளன தகவல்களை வழங்கிய மாணவன் மீது இன்று செவ்வாய்க்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் மாணவர்களை விழிப்பூட்டும் செயற்பாட்டின் போது கோணாவில் பகுதியில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு வருகை தந்திருந்த பொலிஸாரிடம் குறித்த
மாணவன் தனது பகுதியில் இடம்பெறும் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பான தகவலை வழங்கினார். அதனை அடுத்து போதை பொருள் வியாபரிகள் இருவரை பொலிசார் கைது செய்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்கள் மாணனைத் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்து வந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பலரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்நிலையில் மாணவன் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டு உள்ளனர். அதனால் காயமடைந்த மாணவன் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.