தகவல் அறியும் சட்டமூலத்தை மதிக்காத இலங்கை மின்சாரசபை, நடவடிக்கை எடுக்கப்போவது யாா்?

ஆசிரியர் - Editor I
தகவல் அறியும் சட்டமூலத்தை மதிக்காத இலங்கை மின்சாரசபை, நடவடிக்கை எடுக்கப்போவது யாா்?

இலங்கையின் தகவலறியும் உரிமைச் சட்டம்  நடைமுறைக்கு வந்து இன்றுடன் சரியாக 2 ஆண்டுகள் கடந்து விட்டபோதும் இ.மி.சபை மட்டும் குறித்த சட்டத்திற்கு கட்டுப்பட மறுத்துவருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

அரச/அரச சார்பற்ற அனைத்து நிறுவனங்களும் பொதுவான சேவைகள் தொடர்பில் மக்களுக்கு கேட்கும்போதோ கேட்காதபோதோ தகவல் வழங்கவேண்டும்.

தகவலை வாய்மூலமாக அன்றி   விண்ணப்பப் படிவம் மூலம் கேட்கவேண்டும். கேட்கப்படும்  தகவல்களை உரிய தகவல் அலுவலர் விண்ணப்பதாரி  விரும்பும் வடிவத்தில் (ஒலி, காணொளி, எழுத்து) வழங்க வேண்டும்.

தகவல் தருதற்காக தகவல் அலுவலர் ஒருவர் அல்லது இருவர் சிறப்பாக நியமிக்கப்படுவர். தகவல் அலுவலரை நியமிக்காத பட்சத்தில் அதற்கான பொறுப்பை நிறுவனத்தின் தலைமை உயர் அதிகாரி ஏற்க வேண்டும். 

கேட்கப்படும் தகவலை வழங்குவதற்கு ஆமா இல்லையா என்ற பதிலை வழங்குவதற்கு ஒரு தகவல் அதிகாரி ஆகக்கூடுதலாக 14 நாட்கள் அவகாசம் எடுக்கலாம்.

14 நாட்களுக்குள் அவர் ஆம் என்று ஒப்புதல் அளித்தால் இன்னொரு 14 நாட்களுக்குள் குறிப்பிட்ட தகவலை வழங்கியே ஆகவேண்டும்.

தகவல் அலுவலர் தகவலை வழங்கவில்லையெனில் அது நிறுவனத்தின் குறித்த உயர் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். 

உயர் அதிகாரியும் தகவல் வழங்கவில்லையெனில் எந்தவொரு பொதுமகனும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிடம் முறையிடலாம். உனப்படுகின்றது. 

பொதுமக்களுக்கு அவசியமான தகவலை வழங்காத குற்றத்திற்காக ஆணைக்குழு குறித்த நிறுவனத்தின் உயர் அதிகாரிக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும். 

அதற்கான முழு செலவையும் ஆணைக்குழுவே ஏற்கும். நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்மந்தமான தகவல்களை பெறமுடியாது. ஆனால் அது தேசிய பாதுகாப்போடு தொடர்புபட்டதா இல்லையா 

என்பதை ஆணைக்குழுவே தீர்மானிக்கும். எனப்படுகின்றது.  இதில் மிக முக்கியமான ஒன்று, நாட்டின் இதுவரையில் உள்ள அனைத்துச் சட்டங்களை விடவும் மேலான சக்தி வாய்ந்த சட்டமாக 

இது இருப்பதனால் இந்தச் சட்டத்திற்கு முரணான சரத்துக்கள் உள்ள சட்டங்கள் செல்லுபடியற்றதாகும். ஆகவே தகவல் பெறுவது தொடர்பில் பொதுமக்கள் எந்தவித அசௌகரியங்களையும்

அனுபவிக்க தேவையில்லை. என்றுள்ளது. இருப்பினும் யாழில் உள்ள இ.மி.சபை அலுவலகங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் விண்ணப்பங்கள் தொடர்பில் தகவல் வழங்க மறுத்து வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு