SuperTopAds

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை செலுத்தவேண்டிய நிலையில் ஈ.பி.டி.பி, மக்களுக்கு ஒரு சட்டம் ஈ.பி.டி.பிக்கு ஒரு சட்டமா?

ஆசிரியர் - Editor I
ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை செலுத்தவேண்டிய நிலையில் ஈ.பி.டி.பி, மக்களுக்கு ஒரு சட்டம் ஈ.பி.டி.பிக்கு ஒரு சட்டமா?

இலங்கை மின்சாரசபைக்கு 1 கோடி ரூபாவுக்கும் அதிகளவு பணத்தை செலுத்தவேண்டிய நிலையில் ஈ.பி.டி.பி அலுவலகம் இயங்கிக் கொண்டிருப்பதாக இலங்கை மின்சாரசபை தகவல்கள் தொிவிக்கின்றன. 

சிறி­தர் தியேட்­ட­ருக்கு 1998ஆம் ஆண்­டி­லி­ருந்து மின்­சா­ரம் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. இது­வரை 85 லட்­சத்து 50 ஆயி­ரத்து 982 ரூபா 75 சதம் மின்­சார சபைக்­குச் செலுத்­தப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. 

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றம் ஏற்­ப­டும் வரையே மின்­சார சபைக்கு பணம் செலுத்­தப்­ப­ட­வில்லை. அதன் பின்­னர் ஒவ்­ வொரு மாத­மும் பணம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

இதே­போன்று, யாழ்ப்­பா­ணம் நவீன சந்­தைக் கட்­ட­டத்­தில் இயங்­கிய அலு­வ­ல­கம், பஸ்­தி­யன் சந்­தி­யில் இயங்­கிய அலு­வ­ல­ கம், யாழ்ப்­பாண நக­ரில் காங்­சேன்­துறை வீதி­யில் இயங்­கிய அலு­வ­ல­கம் 

ஆகி­ய­வற்­றுக்­கும் மின்­சார விநி­யோ­கம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அதற்­கு­ரிய நிலு­வைப் பண­மும் செலுத்­தப்­ப­ட­ வில்லை. ஈ.பி.டி.பியி­ன­ரி­டம் நீண்ட கால­மாக நிலு­வைப் பணம் 

அற­வி­டப்­ப­டா­த­மையை உறுதி செய்த இலங்கை மின்­சார சபை­யி­னர் மேல­திக தக­வல்­களை வெளி­யிட மறுத்­துள்­ள­ னர். பொது­ம­கன் ஒரு­வர் மூன்று மாதங்­க­ளாக மின்­நி­லுவை செலுத்­த­வில்லை 

என்­றால் கேட்­டுக் கேள்­வி­யின்றி மின் இணைப்பை மின்­சார சபை­யி­னர் துண்­டிக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.