பொதுமக்கள் மீது கடற்படை துப்பாக்கி சூடு.. திருகோணமலை கிண்ணியாவில் பதற்றம்..
திருகோணமலை- கிண்ணியா கஞ்கை பால கீரைத்தீவு பகுதியில் கடற்படையினா் நடாத்திய துப்பாக்கி சூட்டினையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக தொியவருகின்றது.
கடற்படையை சேர்ந்தவரொருவர் மண் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வந்த மூவரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த நிலையில் அவர்களில் இருவர் கடலில் பாய்ந்துள்ளதாக தெரியவருகிறது.
கடலில் பாய்ந்து காணாமல் போன இரு இளைஞர்களும் கிண்ணியா, இடிமன் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
காணாமல்போனவர்களை தேடும் பணியில் பொது மக்களுடன் சேர்ந்து கடற்படையினர் ஈடுபட்டு வருவதுடன், சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவ இடத்துக்கு பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ருப் மற்றும் அவரின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்டோர் உடனடியாக விரைந்துள்ளதுடன்,
சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.