SuperTopAds

2021ம் ஆண்டு பாரிய துறைமுக நகரமாக காங்சேன்துறை மாறும், இறக்குமதி, ஏற்றுமதியும் நடக்குமாம்..

ஆசிரியர் - Editor I
2021ம் ஆண்டு பாரிய துறைமுக நகரமாக காங்சேன்துறை மாறும், இறக்குமதி, ஏற்றுமதியும் நடக்குமாம்..

யாழ்.காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி பணிகள் 2021ம் ஆண்டு நிறைவடையும் நிலையில், சரக்கு கப்பல்கள் வந்து திரும்பும் அளவுக்கு துரித அபிவிருத்தி மேற்கொள் ளப்படும் என அமைச்சர் சாகல ரத்நாயக்க கூறியுள்ளார். 

குறித்த துறைமுகத்துக்கு சரக்குக் கப்பல்கள் வந்துச் செல்வதால் நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிப்பதற்கான சந்தாப்பம் கிடைப்பதுடன் வடபகுதி மக்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளும் கிடைக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கடனுதவியின் 45.27 மில்லியன் டொலர்கள் நிதியுதவியின் கீழ் இத்திட்டங் கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இத்திட்டத்தை விரைவுப்படுத்துவதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் 

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர், அரசின் உயர் அதிகாரிகள் இணைந்து அடுத்த மாதம் 15ஆம் திகதி காங்கேசன்துறைமுகப் பகுதிக்கு செல்லவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.