பங்குனி 22,23,24ம் திகதிகளில் தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு, கட்சி கட்டுப்பாட்டை மீறியவா்கள் மீது நடவடிக்கை பாய்கிறது..
மார்ச் 22 ,23 , 24 யாழ்ப்பாணத்தில் தேசிய மாநாடு , கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய வர்கள் பிற கட்சிகளிற்கு சென்றோர் கட்சியில் இருந்து நீக்குதல் , வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணிக்காக மாவட்டம் தோறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலமையில் குழுக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நேற்றைய தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல்குழுக் கூட்டம் நேற்றைய தினம் கொழும்பு பிறைற்றின் விடுதியில் கட்சியின் தலைவர் தலமையில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறித்த கூட்டத்தில் த மிழ் அரசுக் கட்சியில் இருந்த நிலையில் வேறு கட்சிகள் உருவாக்கம் மற்றும் கட் சியில் அங்கம் வகிப்போர் கட்சியில்
இருந்து முழுமையாக நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டதெ. இதன் பிரகாரம் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த மன்னார் சிவகரன் , அனந்தி சசிதரன் போன்றோரை கட்சியில் இருந்து முழுமையாக இடைநிறெத்துவதாக தீ ர்மானிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்பு கட்சி செயல்பாட்டினை மீறிச் செயல்பட்ட
உறுப்பினர்களையும் இடைநிறுத்துவதோடு தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய புளட் அமைப்பைச் சேர்ந்த வியாழேந்திரேனை தமது கட்சியில் இருந்து நீக்குவதாக புளட் அறிவித்தமையினால் நாடாளுமன்ற உறுப்பி னர் வியாழேந்திரனை தமிழ் அரசுக் கட்சியும் புளட் அமைப்பும் இணைந்து ஆரம்ப விசாரணைக்கு உட்படுத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.
இதேநேரம் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பித்த முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இதன்போது கட்சியில் இருந்து பிரிந்து வேறு கட்சியி ல் அங்கம் வகித்தால் உறுப்புறுமை நீக்கப்படும் என்ற அடிப்படையில் சி.வி.விக்னே ஸ்வரன் மற்றும் அருந்தவபாலன் உள்ளிட்டோரையும் கட்சியில் இருந்து தீக்குவதாக தீர்மானிக்கப்பட்டது.
இதேநேரம் வலி. தெற்கு பிரதேச சபையின் பிரகாஸ் கட்சி கட்டுப்பாட்டை மீறியத ற்காக சட்டப்படி நீக்குவதற்காக நடவடிக்கை எடுத்தவேளையில் அதனை ஏற்றுக் கொண்டதன் பெயரில் அவரை தொடர்ந்து அங்கத்தவராக வைத்திருக்கவும் தீர்மா னிக்கப்பட்டது. இந்த நிலையில் திருகோணமலை மாவட்ட விடயத்தில் நீண்ட சர்ச் சை ஏற்பட்டது.
அதாவது குகதாசன் தன்னிச்சையாக பலரையும் இணைத்து தனித்து முடிவுடுப்ப தாக சுட்டிக்காட்டிய விடயம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் திர்வா கச் செயலாளரின் உறுதிமொழியின் பிரகாரம் கட்டுப்படுத்தப்பட்டது. இதே நேரம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு விடயம் பல கேள்விக்குள்ளாகும் திலமை காணப்படுவதனால்
அதனை பாதுகாக்க கட்சி பல முடிவுகளை ஆராய வேண்டும். என்றார். இதேநேரம் தற்போதைய அரசியல் திலமை தொடர்பில் இன்றுள்ள உண்மை நிலமையை எடுத்துக்கூறுவதும் தமிழர்களின் தீர்வு விடயத்தில் பலவீனம் கானப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.