தமிழக அகதி முகாம்களில் தங்கியிருக்கும் 39 இலங்கை குடும்பங்கள் நாடு திரும்புகின்றனா்..
போா் காலத்தில் இலங்கையிலிருந்து புலம்பெயா்ந்து இந்தியா சென்று தமிழக அகதி முகா ம்களில் தஞ்சமடைந்து தங்கியிருக்கும் 39 குடும்பங்கள் மீள நாடு திரும்பவுள்ளதாக மீள்கு டியேற்ற அமைச்சு தொிவித்துள்ளது.
இந்த தகவலின் படி இம்மாதம் 31ம் திகதி 39 குடும்பங்களை சோ்ந்த 83 போ் இலங்கையில் உள்ள தமது சொந்த இடங்களுக்கு திரும்பவுள்ளனா். இந்தியாவிலிருந்து இரு விமானங்க ளில் இவர்கள் நாடு திரும்பவுள்ளதாக
மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். இவ்வாறு நாடு திரும்பவுள்ளவர்களில் 34 ஆண்களும் 49 பெண்களும் உள்ளடங்குகின்றனர். யாழ் ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை
ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இம்மாதம் 31 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளன ர். இவர்களுக்கான இலவச விமான பயணச்சீட்டு வழங்கப்படுவதுடன், போக்குவரத்து கொடுப்பனவு உள்ளிட்ட மானியங்களும் வழங்கப்படவுள்ளதாக
மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, யுத்த காலத்தில் தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளில் சுமார் 65,000 பேர் அகதி முகாம்களிலும் 35,000 பேர் வௌியிடங்களிலும் தங்கியுள்ளதாக
மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.