தோண்டத் தோண்ட வரும் மனித எலும்வு கூடுகள், ஆய்வாளா்கள் கூறும் அதிா்ச்சி பின்னணி..
மன்னாா் நகா்ப் பகுதியில் சதோஷ வளாகத்த்தில் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக குழி தோண்டியபோது அங்கிருந்து எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டது. இதனை தொடா்ந்து அந்தப் பகுதியில் தொடா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவை போர்க்காலத்தில் இராணுவத்தால் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்களின் எலும்புக் கூடுகள் என்று கரிசனை கொள்ளப்பட்டிருக்கிறது. இலங்கை இராணுவத்துக்கும், புலிகளு க்கும் 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஏராளமான தமிழ் மக்கள்
கொல்லப்பட்டதாக முறைப்பாடுகள் எழுந்தன. இறுதிப்போருக்கு முன்னரும் வடக்கு மா காணத்தில் ஏராளமான தமிழர்களை இராணுவம் கொன்று குவித்திருந்தது. இந்த நிலை யில் இந்த மன்னார் மனிதப் புதைகுழி கவனம் பெறுகின்றது.
இதுவரை 300 எலும்புக்கூடுகள் மீட்பு!
மன்னார் நகரில் ஏராளமான தமிழர்கள் வசித்து வந்தனர். போர் முடிந்து பல வருடங்கள் நி றைவடைந்திருக்கின்ற சூழலில்தான் மன்னார் நகரில் சதோசவுக்கான கட்டடம் கட்டுவத ற்கு நிலம் தோண்டப்பட்டது.
அங்கு ஏராளமான எலும்புக்கூடுகள் குவியல் குவியலாய் கண்டெடுக்கப்பட்டன. இராணு வத்தினரால் வேட்டை யில் கொல்லப்பட்ட மக்களின் எலும்புக் கூடுகள் இவை என்பது பர பரப்பை ஏற்பட்டுத்தியது.
கடந்த செப்ரெம்பர் மாதத்திலிருந்து அங்குள்ள எலும்புக்கூடுகளை மீட்கும் பணியில் சிறப் புச் சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச தலைமையிலான குழவினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை அங்கு 300 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தண்டனைக்குட்படுத்திக் கொலை!
சில இடங்களில் ஒன்றன் மீது ஒன்றாக எலும்புக்கூடுகள் குவியல் குவியலாய் அடுக்கி வை த்ததுபோல கண்டெடுக்கப்பட்டுள்ளன. கம்பியால் கட்டப்பட்ட நிலையிலும் சடலங்கள் க ண்டெடுக்கப்பட்டன.
இது அரசுக்குக் கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. போரின்போது கடத்தப்பட்ட, காணாம லாக்கப்பட்ட வடக்கு மாகாணத் தமிழ் மக்களை இலங்கை இராணுவத்தினர் கொன்று இங் கு புதைத்தமை வெளிப்பட்டது.
கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 12 வயதுக்குட்ட 23 சிறுவர்களின் எலும்புக்கூடுக ளும் அடங்கும். பேராசிரியர் சமிந்த ராஜபக்சாவின் தலைமையில் இந்த எலும்புக் கூடு களை மருத்துவ நிபுணர்கள், சட்ட நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள், தொல்பொருள்
ஆய்வுத் துறையினர் எனப் பலரும் ஆராய்ந்து வருகின்றனர். தோண்டியெடுக்கும் பணிகளைப் பார்வையிடப் பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றச் சம்பவம் என்கிறார் ஆய்வாளர்
சமிந்த ராஜபக்ச இதுகுறித்துக் கூறும்போது, ‘‘ஏராளமான எலும்புக் கூடுகள் இங்கு கண் டெடுக்கப்பட்டுள்ளன. பல நாள்களாக இங்கு அகழாய்வுப் பணிகளைச் செய்து வருகிறோ ம். இந்தச் சம்பவத்தை நாங்கள் ஒரு குற்றச் சம்பவமாகவே பார்க்கிறோம்.
ஒருவேளை இது மயானமாக இருந்தால், புதைக்கப்படும் சடலங்கள் கிடைமட்டமாக இருக் கும். ஆனால் இங்கு உடல்களைக் கொன்று குவித்து அப்படியே பள்ளத்தில் தள்ளிவிட்டது போல் உள்ளது. கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் தற்போது
நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்காவின் மியாமியிலுள்ள ஆய்வகத்துக்கும் சில எலும்புக் கூடுகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவு வரும் வரை வேறு எந்தத் தகவலையும் தெரிவிக்க இயலாது’’ என்றார்.
ஆய்வுக்காக அமெரிக்காவுக்குக் கொண்டு
செல்லப்பட்ட எம்பு எச்சங்கள்..
மன்னார் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களின் மாதிரிகள் ஆய் வுக்காக அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரிகள் அடங்கிய பொதி, மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து
பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு இலங்கை கட்டுநாயக்க பன்னாட்டு விமா ன நிலையத்தினுடாக அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதுவரை மன்னார் ம னி தப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளின் மூலம் 23 சிறுவர்கள் உள்ளிட்ட
277 பேரின் மனித உடல் மீதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கண்டறியப்பட்ட மனித உடல் மீதங் கள், மன்னார் நீதிவானின் நேரடிக் கண்காணிப்பில் தெரிவு செய்யப்பட்டு அமெரிக்கா வின் புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வகத்துக்குக் கார்பன்
பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட மனித மீதங்கள் ஒரு சிறிய பெட்டியில் மிகவும் பாதுகாப்பா ன முறையில் பொதி செய்யப்பட்ட நிலையில்
பி.232/18 என்ற வழக்கு இலக்கமிடப்பட்டு பொலிஸ் வாகனம் ஒன்றில் கட்டுநாயக்கா விமான நிலையம் எடுத்துச் செல்லப்பட்டது. எலும்புக்கூடுகள் உள்ளிட்ட உடல் மீதங்களின் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வரும்
மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜ பக்ச நேரடியாக இதை அமெரிக்க ஆய்வகத்துக்குக் கொண்டுசெல்கின்றார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனுமதி கோரினர்..
இந்த நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பாக மன்னார் நீதிவான் நீதிமன்றில் கடந்த 17ஆம் திகதியன்று சட்டத்தரணிகள் நகர்வுப் பத்திரம் ஒன்றைத் தாக் கல் செய்து புளோரிடாவில் கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்தும்போது
அவற்றை அவதானிப்பதற்குக் காணமல் ஆக்கப்பட்டோர் சார்பாக ஒருவர் செல்வதற்கு அ னுமதி கோரியிருந்தார்கள். இதற்கான அனுமதியினை மன்னார் நீதிமன்றம் வழங்கியிரு ந்தது. இதற்கமையக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்
சார்பில் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் உட்பட 4பேர் மனித மீதங்கள் அடங்கிய பொதியு டன் அமெரிக்கா செல்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது. போர்க்காலத்தில் காணாமலாக்கப் பட்ட, கடத்தப்பட்ட தமிழர்களே இங்கு புதைக்கப்பட்டனர்
என்பது உண்மையாக இருந்தா லும், இறுதிப் போரின்போது இராணுவத்தினர் புரிந்த மனி தகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகள் இழுத்தடிப்புக்குட்பட்டு வரும் சூ ழலில் இந்த மன்னார்ப் புதைகுழி விடயத்தில் தீர்வையும்,
முடிவையும் இழுத்தடிப்படுவது சுலபம் என்றே அரசியலவதானிகள் கருதுகின்றனர். நேர டிச் சாட்சிகள், கானொலிகள், ஒளிப்படங்கள், பன்னாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்திய உண்மைச் செய்திகள் என்று சாட்சியங்கள்,
சான்றா தாரங்கள் வலுவாக இருக்கின்ற இறுதிப்போர்க் குற்றங்களை இழுத்தடிப்புச் செய் கின்ற இலங்கை அரசுக்கு இது வெறும் தூசு என்பதும் அவர்தம் கணிப்பாக இருக்கிறது.