SuperTopAds

ஊடகவியலாளர்கள் படுகொலையை கண்டித்து ஊடகவியலாளர்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுந்தரராஜனின் பதின்மூன்றாவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் ஊடக அமையம் மற்றும் வடக்கு, கிழக்கு கொழும்பு ஊடக அமைப்புக்களின் ஒருங்கினைப்பில் இன்று (26) முற்பகல் 10 மணியளவில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முதல் நிகழ்வாக யாழ் பிரதான வீதியில் உள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் அதிரன் மற்றும் கொழும்பு ஊடக அமைப்பினைச் சேர்ந்த பெடி ஹமகே ஆகியோரால் ஊடகவியலாளர்  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து ஊடகவியலாளர் சுகிர்தராஜனுடன் பணியாற்றிய சக ஊடகவியலாளர் ஜெககேஸ்வரன் பொதுச்சுடரை ஏற்றி வைத்து ஆர்ப்பாட்டப் பாட் டத்தை ஆரம்பித்து வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் "கொல்வப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் குற்றவாளிகளுக்கு எதிராக விசாரணையை வலியுறுத்தியும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

" ரணில் மைத்திரி அரசே நல்லாட்சி வேடம் போடாதே" "மிரட்டாதே மிரட்டாதே ஊடகவியலாளர்களை மிரட்டாதே" காட்டதே காட்டாதே ஊடகவியலாளர்களைக் காட்டிக் கொடுக்காதே" காட்டு காட்டு கொலையாளிகளைக் காட்டு" காப்பாற்றாதே காப்பாற்றாதே கொலையாளிகளைக் காப்பாற்றாதே உள்ளிட்ட கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் முக்கிய கோஷங்களாக இடம்பெற்றிருந்தன.