3-வது ஒருநாள் போட்டி - தென்ஆப்பிரிக்காவுக்கு 318 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

ஆசிரியர் - Admin
3-வது ஒருநாள் போட்டி - தென்ஆப்பிரிக்காவுக்கு 318 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த இரு போட்டிகளில் 1-1 என இரு அணிகளும் சமனிலை வகித்தன.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹக், பகர் சமான் ஆகியோர் களமிறங்கினர்.

பகர் சமான் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய பாபர் அசாம் இமால் அல் ஹக்குடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். 2வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தனர். 

பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த பாபர் அசாம் 69 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய மொகமது ஹபீசும் அரை சதமடித்தார். அவர் 52 ரன்னில் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் இமாம் உல் ஹக் நிலைத்து நின்று ஆடி ஐந்தாவது சதத்தை பதிவுசெய்தார். அவர் 116 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் இமாத் வாசிம் அதிரடியாக ஆட பாகிஸ்தான் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. வாசிம் 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா சார்பில் ஸ்டெயின், ரபடா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது. 

Radio
×