இவா்களையும் கொஞ்சம் பாருங்கள்..

ஆசிரியர் - Editor I
இவா்களையும் கொஞ்சம் பாருங்கள்..

இதயவருத்தத்தால் உயிருக்குப்போராடும் ஆசிரியர் ஒருவருக்கான நிதி உதவி கோரல்....

முல்லைத்தீவு ஐயன்கன்குளம் பாடசாலையில் கல்வி கற்பித்து வருபவரும் கிளிநொச்சியில் வசித்து வருபவருமாகிய இரண்டு பிள்ளைகளின் தந்தை சிவகடாச்சம் சிவநேசன்(வயது-46) அவர்கள் இதய செயற்பாட்டின் பலவீனம் காரணமாக மின்கலம் பொருத்தப்பட்டு இயங்கி வருகின்றார். 

செயற்கையாக பெருத்தப்பட்ட மின்கலம் தற்போது காலாவதியாகிவருவதால் மின்கலத்தை புதுப்பிக்க வேண்டியுள்ளதாக கொழும்பு மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றார்கள்.நேற்றைய தினம் இயலாமை காரணமாக குறித்த ஆசிரியர் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

புதிய மின்கலம் பொருத்துவதற்கும் மருத்துவச்செலவிற்கும் ரூபா ஆறுலட்சம் வரையில் செலவாகும் என்கின்றார்கள் மருத்துவர்கள். தாமதிக்கும் ஒவ்வொரு நாட்களும் குறித்த ஆசிரியரின் உயிருக்கு எதுவும் நிகழலாம் என்கின்றார்கள் மருத்துவர்கள். 

எனவே அன்பான நல்லுள்ளம் கொண்டவர்கள் அவசரமாக தங்களால் இயன்ற நிதியினை வழங்கி இவ்வாசிரியரின் உயிரை காக்க முன்வருமாறு அன்புரிமையுடன் வேண்டுகின்றேன்.

மேலதிக விபரங்களுக்கு குறித்த ஆசிரியர் கற்பிக்கும் பாடசாலையுடன் தொடர்பு கொள்ளவும்.
0775374882 அதிபர், ஐயன்கன் குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு