நாயாறு- நீராவியடியில் அடாவடி புாியும் பௌத்த பிக்கு ஒரு கேவலங்கெட்ட காட்டுமிராண்டி..
முல்லைத்தீவு - நாயாறு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் குடியிருக்கும் பிக்கு கேவலங்கெட்ட காட்டுமிராண்டி பிக்கு எனத் தெரிவித்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,
உரிமைப் போராட்டங்களில் தமிழர்கள் அதிகம் கலந்துகொண்டு தமது உரிமைகளை கேட்கவேண்டுமெனவும் தமிழ் மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுமுள்ளார்.
நாயாறு நீராவியடியேற்றப் பிள்ளையார் கோவில் வளாகத்தில், சட்டத்திற்கு முரணான வகையில் அமைக்கப்பட்டுத் திறக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவி்கையில், நாயாறு நீராவியடியேற்றம் என்று சொல்லப்படும் இந்த இடம், தமிழர்களுடைய பூர்வீக இடமாகும்.
இந்தப் பூர்வீக இடத்தின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், பலகாலமாக பிள்ளையார் கோவில் இருந்ததும், குறித்த பிள்ளையார்கோவிலை இப்பகுதி தமிழ் மக்கள் தினமும் தரிசித்து வருவதும் வளமையான ஒரு செயற்பாடக இருந்தது.
இதேவேளை பூசை, பொங்கல் என்பனவும் இக்கோவிலில் இடம்பெறுவது வளமையான ஒரு செயற்பாடாகும். இப்போது பிந்தி வந்து இவ்விடத்தல் புத்தர் குந்தியுள்ளார்.
இது தொடர்பில் ஏற்கனவே பலதடவைகள் போராட்டங்கள் நடாத்தப்பட்டு, இவ்விடம் பிள்ளையார் கோவிலுக்குரிய இடமென மக்களால் கோரப்பட்டுமுள்ளது.
பிக்குமார் எனப்படுபவர்கள் மதத்தினுடைய குருமார்கள், ஆனாலும் கேவலங்கெட்ட காட்டுமிராண்டிப் பிக்குத்தான் இங்கு நாயாற்றில் உள்ளார் என்பதனை நான் சுட்டிக் காட்டுகின்றேன்.
ஏனெனில் ஒரு அத்துமீறிய நடவடிக்கையை பிக்கு செய்வதற்கா அவர்களுடைய சமயத்தில் சொல்லப்பட்டுள்ளது. என்ற கேள்வியையும் நான் இவவிடத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
இது தொடர்பில் அதாவது கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற முறுகல் நிலை தொடர்பாக, ஏற்கனவே 22.01.2019 அன்று நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு ஒன்று நடைபெற்றது.
அந்த வழக்கு விசாரணைகளின் பிரகாரம் 24ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக பௌத்த பிக்குவும் நீதிமன்றுக்கு முன்னிலையாகவேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது.
அதற்கிடையில் 22ஆம் திகதியே இரவோடிரவாக கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஏற்கனவே அண்மையில் கொண்டுவந்து நிறுவப்பட்ட புத்தர் சிலையும் 23.01.2019 ஆம் நாளன்று திறந்து வைக்கப்பட்டது.
இவ்வாறு புத்தர் சிலை திறக்கப்பட்ட விடயம் தெரிந்து சம்பவ இடத்திற்கு சென்று நிலமைகளைப் பார்வையிடும்போது, நாங்கள் தர்க்கம் செய்ய வந்ததாக அங்கிருந்த சிலர் தெரிவித்தனர்.
மேலும் ஒரு போதகர்களாக, மதகுருமாரக இருப்பவர்கள் சரியான முறையில் நடக்கவேண்டும்.
புத்தர் அகிம்சையை, அன்பை போதித்தவர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் புத்தருக்கு எதிரான நடவடிக்கைகளைத்தான் இந்த சில பிக்குமார் செய்துகொண்டிருக்கின்றார்கள்.
மேலும் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன். இங்கு இருக்கும் இந்த பிக்குவிற்கு, பிக்குவற்குரிய அனுமதியோ அல்லது பட்டமோ, அதை வழங்கியது யார் என நான் முக்கியமாகக் கேட்கின்றேன்.
ஏனெனில் காட்டுமிராண்டிகளுக்கெல்லாம் இவ்வாறான அதிகாரங்களை வழங்கினால், சட்டம் ஒழங்கு எல்லாவற்றினையும் மீறிச் செயற்படுகிறார்கள்.
ஆனால் சட்டம் ஒழுங்கை நாமும் எமது மக்களும் மதிக்கின்றோம். அவ்வாறு சட்டம் ஒழுங்கை நாம் மதிப்பதால் தான் ஒவ்வொரு விடயங்களுக்கும் காவற்றுறையையும், நீதிமன்றத்தையும் நாடுகின்றோம்.
இந்த செயற்பாட்டில் காவற்றுறையினரும், இராணுவத்தினரும், அரசாங்கத்திலுள்ள சிலரரும் பிக்குவோடு சேர்ந்து எமது நிலங்களை அபகரிக்க நாடகமாடுகின்றார்கள்.
எமது மக்கள் ஆர்ப்பாட்மோ அல்லது இந்த செயற்பாட்டுக்கு எதிரான நடவடிக்கை செய்தால், உடனடியாக மறுப்பேதுமில்லாமல் எம்மைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துகின்றார்கள்.
ஆனால் இவ்வளவு மோசமான நடவடிக்கையைச் செய்த பிக்குவோ, அவர்களுக்குத் துணைபோன காவற்றுறையினரோ, அல்லது இராணுவத்தினரோ இவர்களுக்கான நடவடிக்கைகளை அரசாங்கமோ, நீதிமன்றமோ எடுக்கவேண்டும்.
எமது மக்கள் மிகவும் வேதனையுடன் காணப்படுகின்றார்கள். இன்று சமாதானம் சமாதானம் என்று சொல்லிக்கொண்டு, இந்தக்காலத்திலே எங்களுடைய முக்கியமான இடங்களையும்,
நிலப்பரப்புக்களையும் தொல்லியல் திணைக்களம் என்ற போர்வையில் இங்கு வந்து அவர்கள் செய்துகொண்டிருக்கின்றார்கள் என்றால் நாம் என்ன செய்யமுடியும்.
ஆனாலும் நாம் இந்த செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். பிள்ளையார் இங்கே இருக்கின்றார். எனவே நாம் விடமாட்டோம்.
எது எவ்வாறாயினும் இதற்கான தீர்வுகள் எமக்குக் கிடைக்கவிட்டால், எங்களுடைய மக்கள் இதை அனுமதிக்கமாட்டார்கள்.
ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றுள்ள மற்றுமொரு விடயத்தினைச் சுட்டிக்காட்டுகின்றேன்.
கொக்குளாயிலும் இதுபோலதான். கொக்குளாய் விகாரை கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அதைப்பற்றிய பிரச்சினைகளை தெரியப்படுத்திக்கொண்டிருக்கும்போதும்,
நீதிமன்றத்திற்கு சென்றது என்பதைத் தாண்டி, காணிக்குப் பொறுப்பாக இருக்கின்ற பிரதேசச் செயலாளர் உட்பட அந்த விசேட காணிச் செயலணி வந்து கச்சேரில் நடைபெற்ற கூட்டத்தில், செயலணியால் விகாரை கட்டுவதை உடனடியாக நிறுத்தும்படி கூறப்பட்டது.
அதையும் மீறி இந்த காட்டுமிராண்டிகள் நடந்துகொண்டிருக்கிறார்கள் எனில், இதற்கு என்ன நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கின்றது. என்பதுதான் எமது கேள்வி.
இவ்வாறான மதத்திணிப்புச் செயற்பாட்டிற்கு நாட்டின் அரச தலைவர் உட்பட அனைவரும் ஏன் எதிர்ப்புத் தெரிவித்து நிறுத்த முடியாது.
அரச தலைவர் முல்லைத்தீவிற்கு காணி வழங்கப்போகிறேன் என்னும் போர்வையில், ஜெனிவாவை ஏமாற்றவே இங்கு வந்தார்.
அவர்தான் இங்கு வந்து இந்த புத்தர் சிலையை அமைக்குமாறும் கூறிவிட்டுசசென்றாரோ தெரியவில்லை.
இதுபோன்ற விடயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதென்பதுடன், இத்தகைய செயற்பாடு காட்டுமிராண்டித் தனமான செயற்பாடு என்றும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேவேளை தமிழர்கள் மாற்றான்தாய் மனப்பன்மையுடனனேயே அரசாங்கத்தால் பார்கப்படுகின்றோம்.
எனவே எங்களுடைய நடவடிக்கைகளில் அவர்கள் கரிசனையுடன் செயற்படுவதில்லை.
மேலும் எமது தமிழ் மக்களுக்கும் சில விடயங்களை கூறவிரும்புகிறேன். எங்களுடைய இந்த போராட்டங்களில் மக்கள் விழிப்புணர்வுடன் மிக அதிகமான வகையில் நாங்கள் தெரியப்படுத்துவதற்கு முனையாவிட்டால்,
இன்னும் நாம் பறிகொடுக்கப்போகின்றோமா என்ற கேள்வி இங்கே எழுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கெதிரான எமது போராட்டஙகள் தொடரும் என்றார்.