தொல்லியல் திணைக்களம், பொலிஸாாின் ஆதரவுடன் அவசர..அவசரமாக அமைக்கப்பட்டது புத்தா் சிலை..

ஆசிரியர் - Editor I
தொல்லியல் திணைக்களம், பொலிஸாாின் ஆதரவுடன் அவசர..அவசரமாக அமைக்கப்பட்டது புத்தா் சிலை..

நாயாறு நீராவியடிப்பிள்ளையார் கோவில் வளாகப் புத்தர்சிலை போலீஸார், தொல்லியல் திணைக்களத்தினரின் உதவியுடன் திறப்பு.முல்லைத்தீவு - நாயாறு நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை 23.01.2019 இன்றையநாள் திறக்கப்பட்டுள்ளது.

மேலும்நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கு கடந்த 14ஆந் திகதி அன்று அப்பகுதித் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளுக்காக சென்றவேளை அப்பகுதியில் குடியிருக்கும் பௌத்த துறவிக்கும் மக்களுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.

இந் நிலையில் இந்த முறுகல் நிலை தொடர்பாக முல்லைத்தீவு போலீஸார் நீதமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.அந்தவகையில் எதிர்வரும் 29ஆம் திகதி வழக்கிற்கு வருமாறு முறன்பாடுகளில் ஈடுபட்டவர்களை நீதிமன்றம் அழைப்புவிடுத்திருந்தது.

எனினும் அவசர நிலையொன்றினை உணர்ந்து, ஆலய நிர்வாகத்தினர் மற்றும், தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் ஆகியோர் நகர்த்தல் பத்திரம் ஒன்றின்மூலம் அது தொடர்பன வழக்கு 22.01.2019நேற்றைய நாளுக்கு 

முற்போடப்பட்டு நடைபெற்றது.நேற்றைய வழக்கு விசாரணைகளில், குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்பது, தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிராமமக்களின் சார்பில் 

ஆயரானவர்களினால் வெளிப்படுத்தப்பட்டது.மேலும் பௌத்த துறவியையும் எதிர்வரும் 24ஆந் திகதி (நாளை) மன்றில் ஆயராகவேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டிருந்து.இந் நிலையிலேயே இன்றைய நாள் போலீஸார், மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினரின் 

ஆதரவுடன் சட்டவிரோதமான வகையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை திறக்கப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதி தமிழ் மக்கள் பெரும் அதிர்ப்தி அடைந்துள்ளனர். இதேவேளை தகவலறிந்து குறித்த இடத்திற்கு விரைந்த 

முன்னாள் வடமாகாசபை உறுப்பினர் து.ரவிகரன்  நிலமைகளை நேரில் கண்காணிக்கும்போது, அங்கிருந்த பௌத்த துறவிகள் மற்றும் தென்னிலங்கயைில் இருந்து வருகை தந்தவர்கள் சிலரும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.

மேலும் அங்கு செய்தி சேகரிப்பிற்குச்சென்ற ஊடகவியலாளர்கள் தென்னிலங்கையில் இருந்து வருகைதந்தவர்களாலும், பௌத்த துறவிகள் சிலராலும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதுடன், 

ஊடகவியலாளர்களுடன் அவர்கள் முறன்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு