வடக்கு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஜனாதிபதி, படைப்புழு தாக்கத்திற்கு முதலைக் கண்ணீா் வடிக்கிறாா்..
இலங்கையில் சேனா படைப்புழுவின் தாக்கம் தற்போது உணரப்பட்டிருக்கும் நிலையில் பாதிக்கப்பட்டுள் ள விவசாயிகளுக்கு 40 ஆயிரம் வரையில் இழப்பீடு வழங்குங்கள் என கூறியிருக்கும் ஜனாதிபதி, வடக்கில் வெள்ள பாதிப்பினால் பல ஆயிரம் ஏக்கா் நெற் செய்கை அழிவடைந்தமை குறித்து பேசாமிலிருக்கிறாா்.
மலையக பகுதிகளில் சேனா படைப்புழுவின் தாக்கம் அண்மைய நாட்களில் உணரப்பட்டிருக்கின்றது. இ தனால் விவசாயத்திற்கு பாாிய ஆபத்து உருவாகியுள்ளமை உண்மை. ஆனால் வடக்கிலும் வெள்ளம் மற்று ம் கனமழையினால் பெருமளவு நெற்செய்கை அழிவடைந்தது.
இந்நிலையில் சேனா படைப்புழு தாக்கத்தை எதிா்கொள்ள பெரும் தயாா்ப்படுத்தலை செய்யும் ஜனாதிபதி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 40 ஆயிரம் வரையில் இழப்பீட்டை வழங்குமாறு கூறுகிறாா், ஆனால் வடக்கில் வெள்ளத்தால் அழிவடைந்த நெற் செய்கைக்கு தருவதாக கூறிய இழப்பீடும் இதுவரை வழங்க
ப்படாத நிலையில் உண்டான சேதத்தை குறைத்து மதிப்பீடு செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகி ன்றது. ஜனாதிபதியின் இத்தகைய செயற்பாடு வடக்கு மக்கள் மத்தியில் பாாிய தாக்கத்தை உண்டாக்கி யிருக்கின்றது.