SuperTopAds

யாழ். ஏழாலை களபாவோடை வசந்த நாகபூசணி அம்பாளுக்கு நாளை தேர்த் திருவிழா

ஆசிரியர் - Admin
யாழ். ஏழாலை களபாவோடை வசந்த நாகபூசணி அம்பாளுக்கு நாளை தேர்த் திருவிழா

யாழ்.வலிகாமத்தில் பிரசித்திபெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் யாழ்.ஏழாலை தெற்கு களபாவோடை வசந்த நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை சனிக்கிழமை(19-01-2019) முற்பகல்-10 மணிக்கு சிறப்பாக இடம்பெறவுள்ளது.

நாளை மறுதினம்-20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தைப்பூரணை தினத்தன்று முற்பகல்-10 மணிக்கு “ஸ்ரீ வசந்த நாக புஷ்கரணி” தீர்த்தத் தடாகத்தில் தீர்த்தோற்சவம் இடம்பெறும்.

இதேவேளை,இவ்வாலய வருடாந்த மஹோற்சவம் கடந்த-11 ஆம் திகதி முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ச்சியாகப் பத்துத் தினங்கள் இடம்பெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.