நியூசிலாந்து அணி அறிவிப்பு

ஆசிரியர் - Admin
நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியா தொடரை முடித்தவுடன் நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 ஒரு நாள், மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

முதல் ஒருநாள் போட்டி வருகிற 23 ஆம் திகதி நேப்பியரில் நடைபெறுகிறது. 

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான 14 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் அணிக்கு திரும்பி உள்ளார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட கொலின் டி கிராண்ட்ஹோம், டாம் லாதம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

நியூசிலாந்து அணி வருமாறு:- வில்லியம்சன் (தலைவர்), மார்டின் கப்தில், ராஸ் டெய்லர், கொலின் முன்ரோ, மெத் ஹென்ரி, நிக்கோலஸ், பெர்குசன், டாம் லாதம், பிரஸ்வெல், டிரென்ட் போல்ட், கிராண்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுத்தி, இஷ் சோதி.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு