சென்னை புலியூர் ஜூம்ஆப் பள்ளிவாசலினால் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கௌரவிப்பு.

ஆசிரியர் - Editor2
சென்னை புலியூர் ஜூம்ஆப் பள்ளிவாசலினால் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கௌரவிப்பு.

சென்னையிலுள்ள அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் புலியூர் ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்களால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கௌரவிக்கப்பட்டார். 

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் புலியூர் ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற இக்கௌரவிப்பு நிகழ்வில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை மாநில துணைத் தலைவரும் முன்னாள் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். 

இதன்போது இராஜாங்க அமைச்சர் உலகளாவிய முஸ்லிம்களின் ஐக்கியம், ஒற்றுமையினை வலியுறுத்தி பேசினார். அத்தோடு குறிப்பாக தமிழ் நாட்டு முஸ்லிம் மக்கள் சார்பில் தனக்கு வழங்கப்பட்ட கௌரவத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.  

Radio
×