SuperTopAds

திருகோணமலை மூதுாா் பகுதியில் திடீரென பெருமளவு மாடுகள் உயிாிழப்பு, சகல இறைச்சி கடைகளும் மூடப்பட்டன..

ஆசிரியர் - Editor I
திருகோணமலை மூதுாா் பகுதியில் திடீரென பெருமளவு மாடுகள் உயிாிழப்பு, சகல இறைச்சி கடைகளும் மூடப்பட்டன..

திருகோணமலை மாவட்டம் மூதுாா் பிரதேசத்திற்குட்பட்ட தோப்பூா், நல்லுாா், சம்பூா் பள்ளிக்குடியிருப்பு போன்ற பகுதி களில் திடீரென பெருமளவு மாடுகள் உயிாிழந்துள்ளது. இவற்றை அகற்றும் பணிகளை மூதுாா் பிரதேசசபையினா் மேற் கொண்டுள்ளனா். 

இது தொடா்பில் மேலும் தொியவருவதாவது, 

மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட தோப்பூர், நல்லூர் மற்றும் சம்பூர் பள்ளிக்குடியிருப்பு பகுதிகளில் அதிகளவான மாடுகள் உயிரிழந்துள்ளன. இவற்றை பெக்கோ இயந்திரம் கொண்டு புதைக்கும் நடவடிக்கை பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

அதிகளவான மாடுகள் உயிரிழந்து காணப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைவாக தோப்பூர் கரைச்சை காட்டுப் பகுதியில் இறந்த மாடுளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 600 க்கும் அதிகமான மாடுகள் உயிரிழந்துள்ளதோடு தொடர்ந்தும் இறந்து வருகின்றன. மேலும் மாடுகளின் உயிரிழப்பிற்கான காரணத்தை கண்டறிவதற்காக இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் முடிவுகள் வரும் வரையில்

மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட 14 இறைச்சிக் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.