டெஸ்ட் தொடர் வெற்றியை டான்ஸ் ஆடிக் கொண்டாடிய இந்திய வீரர்கள்

ஆசிரியர் - Admin
டெஸ்ட் தொடர் வெற்றியை டான்ஸ் ஆடிக் கொண்டாடிய இந்திய வீரர்கள்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வெற்றி பெற்ற பிறகு மைதானத்திலேயே இந்திய அணி வீரர்கள் டான்ஸ் ஆடி கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த அணிக்கு எதிராக 3 வகையான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் இரு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-1 என முன்னிலை பெற்றது.

சிட்னியில் நடைபெற்ற 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிரா ஆனதால் இந்திய அணி 2-1 என தொடரைக் கைப்பற்றியது. இதன்மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்தியா, 71 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதியது.

சிட்னி மைதானத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக போதி வெளிச்சம் இல்லை. இதனால், கடைசி இரண்டு நாட்கள் ஆட்டத்தில் மொத்தம் 25 ஓவர்களே வீசப்பட்டன. 5-ம் நாள் ஆட்டம் முற்றிலுமாக கைவிடப்படுவதாகவும், போட்டி டிரா எனவும் நடுவர்கள் அறிவித்தனர். இதனால்இ இந்திய அணி தொடரை வென்றது.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்த மகிழ்ச்சியில் மைதானத்துக்கு வந்த இந்திய அணி வீரர்கள் டான்ஸ் ஆடி கொண்டாடினர். வீரர்கள் டான்ஸ் ஆடிய வீடியோவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

போட்டி முடிந்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிக் கேப்டன் விராட் கோலி, “கொண்டாட்டங்கள் இப்போது தொடங்கிய இரவு வரை நடைபெறும்” என தெரிவித்தார்.

Radio
×