SuperTopAds

வசூலில் மட்டுமல்ல டிக்டாக்கிலும் விஜய் தான் கில்லி..!

ஆசிரியர் - Admin
வசூலில் மட்டுமல்ல டிக்டாக்கிலும் விஜய் தான் கில்லி..!

விஜய் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ’சர்கார்’ திரைப்படம், சர்ச்சைகளுடன் கூடிய காட்சியில் உருவாக்கப்பட்டதால் மிகுந்த சிக்கலை சந்தித்தது.

அதுவே இந்த படத்திற்கான சந்தையை அதிகரிக்க, ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் இந்தியளவில் டிரெண்டிங் அடித்தது. மேலும் படத்தில் பல அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருந்ததால், அது டிக்டாக் செயலியிலும் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்டது.

இளைய தலைமுறையினரிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ள ‘டிக் டாக்’ செயலி மூலம் சர்கார் பட வசனங்களை லிப் – சிங்குடன் பேசி அதில் பதிவு செய்ய தொடங்கினர்.

இதனால் டிக்டாக் செயலியையும் நடிகர் விஜய் ஆக்கிரமித்துள்ளார். டிக் டாக்கில் நடிகர் விஜய்யின் பெயரிலான ஹேஷ்டேக்கை சுமார் 100 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர். விஜய்யின் இந்த புதுவிதமான சாதனையை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரென்டாக்கி வருகின்றனர்.