SuperTopAds

முத்தத்தால் காதலனை அறிவித்த எமி ஜாக்சன்

ஆசிரியர் - Admin
முத்தத்தால் காதலனை அறிவித்த எமி ஜாக்சன்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் நிலாவாக நடித்திந்த எமி ஜாக்சன் முத்தத்தால் இவர் தான் எனது காதலன் என்று அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில ‘மதராச பட்டணம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இதையடுத்து அவர் விக்ரம், தனுஷ், விஜய், ரஜினி உட்பட பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். 

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் ‘2.0’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. லண்டனை பூர்விகமாக கொண்ட இவர் பெரும்பாலும் அங்கு தனது காதலருடன் தான் நெருக்கமாக இருப்பார்.

அங்கிருந்தபடியே தனது ஹாட்டான புகைப்படங்களை இணையத்தின் மூலம் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதிய வீட்டில் காதலுருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

அதே போன்று தான் தற்போது புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காதலர் முத்தம் கொடுப்பது போன்று இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது காதலர் பெயர் ஜார்ஜ் பனயிடோ என்று கூறப்படுகிறது.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: வாழ்வில் புதிய சாகசம் தொடங்கியுள்ளது. ஐ லவ் யூ. எனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றியதற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.