தமிழ் மக்களின் வாழ்விடங்களில் இருந்து இராணுவம் வெளியேறவேண்டும். அதில் மாற்றுக்கருத்தில்லை..

ஆசிரியர் - Editor I
தமிழ் மக்களின் வாழ்விடங்களில் இருந்து இராணுவம் வெளியேறவேண்டும். அதில் மாற்றுக்கருத்தில்லை..

தமிழ் மக்களுடைய வாழ்விடங்களில் இருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என்பதில் மாற்று க்கருத்துக்கு இடமில்லை. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் மன்னாா் மாவட்ட நாடாளுமன்ற உறு ப்பினா் சாள்ஸ் நிா்மலநாதன் கூறியுள்ளாா். 

அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போது வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேர வேண்டிய அவசியம் இல்லை என தகவல் வெளியிடப்பட்டிருந்தது. குறித்த கருத்து தொடர்பாக 

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  படிப்படியாக சிறு அளவு முன்னேற்றம் இருந்தாலும் மக்கள் எதிர் பார்த்த அளவு இராணுவம் 

மக்களின் காணிகளில் இருந்து செல்லவில்லை. ஏற்கனவே 1980ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்த இராணுவ முகாம்களை தவிர அதற்குப் பிறகு ஏற்பட்ட யுத்தம் காரணமாக உருவாக்கப்பட்ட இராணுவ முகாம்கள் மற்றும் இராணுவத்தினர் 

விலகி மக்களின் ஜனநாயக வாழ்க்கைக்கு இடையூறு இல்லாத வகையில் இராணுவம் செயற்பட வேண்டும். இது தொடர்பாக ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு