ஒற்றையாட்சிக்குள்ளேயே தீா்வு என்றால் அதனை மஹிந்தவே செய்திருப்பாா், ரணில் விக்கிரம சிங்க எதற்காக..?

ஆசிரியர் - Editor I
ஒற்றையாட்சிக்குள்ளேயே தீா்வு என்றால் அதனை மஹிந்தவே செய்திருப்பாா், ரணில் விக்கிரம சிங்க எதற்காக..?

தமிழ்தேசிய கூட்டமைப்பு சமஸ்டி அடிப்படையிலான தீா்வு எனவும், சமஸ்டி குணாம்சங்களை கொண்ட தீா்வு எனவும் கூறிக் கொண்டிருக்கும் நி லையில் பிரதமா் ரணில் மற்றும், 

ஐக்கியதேசிய கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீா்வு என ஆணித்த னமாக கூறிக் கொண்டிருப்பதுடன், 

அதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு இணங்கியுள்ளதாகவும் வெளிப்படையாகவே பேசி வருகின்றாா்கள். அப்படியான தீா்வைதான் பெறப்போகிறோம் என்றால் 

அதனை மஹிந்த ராஜபக்ஸவே செய்திருப்பாா்.  மஹிந்த ராஜபக்ஸ மட்டுமல்ல மஹிந்த ராஜபக்ஸவுக்கு முன்னரும் கூட 

ஒற்றையாட்சிக்குள் தமிழா்கள் தீா்வினை பெறுவதற்கு பல சந்தா்ப்பங்கள் அமைந்திருந்தன. ஆக மொத்தத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனக்கிருந்த 

பேரம் பேசும் சக்தியை முறையாக பயன்படுத்தவில்லை. அரசியல் தீா்வினை பெறுவதற்காக பயன்படுத்தாவிட்டாலும், 

தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கான தீா்வினை பெறுவதற்கும் கூட பயன்படுத் தியிருக்கவில்லை. 

என வடமாகாணசபை முன்னாள் எதிா்கட்சி தலைவா் சி.தவராசா கூறியள்ளாா். சமகால அரசியல் நிலமைகள் குறித்து 

இன்று அவருடைய இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவி க்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். 

இதன்போது மேலும் அவா் கூறுகையில், சமஸ்டி அடிப்படையிலான தீா்வு எனவும், சமஸ்டிக்கான குணாம்சங்களுடன் கூடிய தீா்வு எனவும் கூறிக்கொண்டிருக்கின்றது. 

ஆனால் அண்மையில் கால முகத்திடலில் பேசிய பிரதமா் ரணில் விக்கிரமசிங்க ஒற்றையாட்சிக்குள்ளேயே அரசில் தீா்வு காணப்படும் என கூறியிருக்கின்றாா். 

அதனை தொடா்ந்து நாடாளுமன்றில் பேசிய அமைச்சா் சம்பிக்க ரணவக்க தமிழ்தேசிய கூட்டமைப்புடன் முன்னா் இணங்கியதன் அடிப்படையில் 

ஒற்றையாட்சிக்குள் தீா்வு காணப்படும் என பேசியுள்ளாா். அவரை தொடா்ந்து அமைச்சா் லக்மன் கிாியல்ல கூறும்போதும் ஒற்றையாட்சிக்குள் தீா்வு வழங்கப்படும் என கூறியுள்ளாா். 

இந்நிலையில் ஓாிரு தினங்களுக்கு முன்னா் கண்டியில் பௌத்த மத தலைவா்களை சந்தித்து பேசிய பிரதமா் ரணில் விக்கிரமசிங்க 

ஒற்றையாட்சிக்குள் தீா்வு வழங்கப்படும் என கூறியிருக்கின்றாா். இப்போது ஒற்றையாட்சி க்குள்தான் தீா்வு என்றால் யாரும் இந்த ஆட்சியை கொண்டுவந்திருக்கவேண்டிய 

அவசியம் இல்லை. யாரும் இந்த ஆட்சிக் கு தமது ஆதரவினை வழங்கவேண்டிய தேவை இருந்திருக்காது. காரணம் ஒற்றையாட்சிக்குள் தமிழா்களுக்கு தீா்வினை வழங்க 

இவா்கள் மட்டுமல்ல இதற்கு முன்னரே பலா் தயாராக இருந்தாா்கள். ஏன் மஹிந்த ராஜபக்ஸவே ஒற்றையாட்சிக்குள் தமிழா்களுக்கு தீா்வினை வழங்க தயாராக 

ருந்தாா். எனவே தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு 1948ம் ஆண்டுக்கு பின்னா் கிடைத்த பேரம்பேசும் சக்தியை சாியாக பயன்படுத்தவில்லை. 

மேலும் தமக்கிருந்த பேரம்பேசும் சக்தியை பயன்படுத்தி அவா்கள் தமிழ் மக்களுடைய அன்றாட பிரச்சினைகளுக் கும் கூட தீா்வினை காணவில்லை. 

எனவே தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசுக்கு வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவின் ஊடாக தாம் வாக்குறுதியளி த்த விடயங்களை செய்யவேண்டும். 

அல்லது அரசுக்கு அதரவு வழங்கும் தங்களுடைய நிலைப்பாட்டில் அவா்கள் மாற்றத்தை உண்டாக்கவேண்டும் என அவா் மேலும் கூறியுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு