யாழ்.கொக்குவில் மேற்கு பகுதியில் பாரிய கோஷ்டி மோதல்.. நடந்தது என்ன?

ஆசிரியர் - Editor
யாழ்.கொக்குவில் மேற்கு பகுதியில் பாரிய கோஷ்டி மோதல்.. நடந்தது என்ன?

யாழ்.கொக்குவில் மேற்கு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 4 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், 7 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றி சென்றுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொக்குவில் மேற்கு காந்திஜீ கிராமத்தில் இன்று மாலை குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

அயல் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும், காந்திஜீ கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையில் கடந்த சில தினங்களாக முறுகல் நிலை இருந்து வந்துள்ளது. 

இதன் தொடர்ச்சியாக இன்று மாலை சுமார் 30 ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் குழு காந்திஜீ கிராமத்திற்குள் நுழைந்து அடிதடியை ஆரம்பித்திருக்கின்றனர். 

இதனையடுத்து காந்திஜீ கிராமத்தைசேர்ந்த இளைஞர்கள் குறித்த இளைஞர்குழுவை சுற்றிவளைத்து மடக்கிப்பிடித்துள்ளதுடன், கடுமையாக தாக்கியுள்ளனர். 

இதனையடுத்து இரு குழுக்களுக்குமிடையில் கடுமையான சண்டை நடந்துள்ளது. தொடாந்தும் தாக்கு பிடிக்க முடியாத நிலையில் அயல் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 

அங்கிருந்து தமது மோட்டார் சைக்கிள்கள், ஆயுதங்களை கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்த சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் தாக்குதல் நடாத்தவந்த அயல் கிராமத்தைசேர்ந்த

4 இளைஞர்களை கைது செய்துள்ளதுடன், 7 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர். 


Radio
×