யாழ்ப்பாணம்- திருகோணமலை இடையில் வானில் தோன்றவுள்ள அதிசயம்..
2019ம் ஆண்டு டிசம்பா் மாதம் 26ம் திகதி பூரண சூாிய கிரகணம் ஒன்று தென்படும் என அறிவிக்க ப்பட்டிருக்கின்றது.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 15 வருடங்கள் கழிந்த ஒருநாளில் இந்த கிரகணம் தென்படவுள்ளது. இந்த சூரியக்கிரகணம்,
இலங்கையில் யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும்.
ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கிரகணத்தின்போது சூரியன், மறைக்கப்பட்டு சிறிய வளையம் ஒன்றைப்போல காட்சியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.