நோர்வேயில் "பனைமரக்காடு" - திரையிடல் ! நோர்வே உறவுகளிடமிருந்து நாளை நல்ல செய்தி வரும்..!

ஆசிரியர் - Admin

நோர்வேயில் "பனைமரக்காடு" - திரையிடல் !

பனைமரக்காடு - திரைப்படத்தை உங்கள் விழிகளுக்கு விருந்து வைக்க "Rommen Scene" திரை அரங்கத்திற்கு அழைக்கின்றோம். 

பனைமரக் காட்டினை தொடர்ந்து வளர்ப்பது எங்கள் பொறுப்பும், கடமையும். உங்கள் அன்பினை ஆதரவாய் ஊற்றி வளர்த்திட வாருங்கள்

காலம் : ஞாயிறுக்கிழமை, 30.12.18 

நேரம்: மாலை 15.00 மணி - மாலை 18.00 (இரண்டு காட்சிகள்)

இடம் : Rommen Scene

"பனைமரக்காடு" திரைப்படத்தை ஈழத்தின் சினிமா என்று சொல்லலாம். ஈழத்தமிழ் சினிமாவில் தனித்துவம் மிக்க படைப்பாளி, திரு ந.கேசவராஜனின் இயக்கத்தில் “பனைமரக்காடு” ஒஸ்லோ, நோர்வேயில் திரையிடப்படுகின்றது.

ஈழத்துக் கலைஞர்களின் முழுமையான பங்களிப்பில் இந்தத் திரைப்படம் உருவாகியிருக்கிறது. உங்கள் ஆதரவை, திரையரங்கம் சென்று பார்ப்பதன் மூலம் தெரிவியுங்கள்.

ஈழத்தமிழ்ச் சினிமாவின் பாதை நெடியது. பயணம் தொடர இது போன்ற படைப்புகள் உலகம் முழுவதும் வெளிவர எமது பங்களிப்பு அவசியம் என்பதை உணருங்கள். எமக்கான இலக்கும் என்றோ தீர்மானிக்கப் பட்டுவிட்டது.

விருப்புக்கள் அளிப்பதோடு நிற்காமல். விமர்சனக்கருத்துக்கள் விதைத்து, குடும்பமாய்ப் பார்த்து மகிழ்ந்து, ஒளிவிழாக் காலத்தில் ஒளியேற்ற வாருங்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு