SuperTopAds

அரசியல் குழப்பங்களுக்கு காரணம் என்ன? கூட்டமைப்பு அமைச்சு பதவியை ஏன் ஏற்கவில்லை? பல கேள்விகளுக்கு மனம் திறந்தாா் நா.உ.எம்.ஏ.சுமந்திரன்..

ஆசிரியர் - Editor I
அரசியல் குழப்பங்களுக்கு காரணம் என்ன? கூட்டமைப்பு அமைச்சு பதவியை ஏன் ஏற்கவில்லை? பல கேள்விகளுக்கு மனம் திறந்தாா் நா.உ.எம்.ஏ.சுமந்திரன்..

தமிழ்தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பின் ஊடாக தீர்வினை கேட்கும் தமிழ் மக்கள் அரசியலமைப்பு மீறப்படும்போது பார்த்துக் கொண்டிருந்தால் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு அர்த்தம் என்ன? என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

சமகால அரசியல் நிலமைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்.அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 2015ம் ஆண்டு ஆட்சி மா ற்றத்தை உருவாக்க 

நாங்களே உறுதுணையாக இருந்தோம். 2015 ஆகஸ்ட் மாதம் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் ஊடாக தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வினை காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 

அந்த விடயத்தில் ஒரு குறித்தளவு இணக்கப்பாடு காணப்பட்டு இடைக்கால அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்ட நிலையில் அது வெளியாகும் தினத்திலிருந்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிற்போடப்பட்டு பின்னர் வெளியானது. அவ்வாறு பிற்போடப்பட்டமைக்கு காரணம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மட்டுமே. 

குறிப்பாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறமை ஒழிப்புக்கு ஆரம்பத்தில் அவர்கள் இணங்கியிருந்தாலும் பின்னர் அவர்களுடைய நிலைப்பாட்டில் மாற்றம் உருவாகியிருந்தது. அதிலும் நீண்ட தடங்கல்கள் உருவாகி பின்னர் அரசியலமைப்பை வெளியிடுவதற்கான திகதி வெளியிடப்பட்டிருந்த 

நிலையில் திடீரென தென்னிலங்கையில் அரசியல் குழப்பம் உருவானது. இப்போது மஹிந்த தரப்பிலிருந்து பலர் கூறியுள்ள விடயம் நவம்பர் 7ம் திகதி வரவிருந்த புதிய அரசியலமைப்பை குழப்பவே ஜனாதிபதி அந்த தீர்மானத்தை எடுத்தார் எனவும். புதிய அரசியலமைப்பு சமஸ்டி அடிப்படையிலான 

அரசியலமைப்பு அதன் ஊடாக நாடு பிரிக்கப்படும் அதனை ஜனாதிபதி தடுத்தார் என. ஆகவே நாங்கள் எந்த நோக்கத்திற்காக ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்க எங்கள் ஆதரவை வழங்கினோமோ அந்த நோக்கத்தை மழுங்கடிக்கும் நோக்கத்திலேயே குழப்பம் உருவாக்கப்பட்டது. 

அந்த குழப்பம் அரசியலமைப்புக்கும், சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானதாக இருந்தது. 19ம் திருத்தச்சட்டத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறமை முக்கால் வாசிக்கு ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால் 19ம் திருத்தச்சட்டத்தை கண்டுகொள்ளாமல் 19ம் திருத்தச்சட்டத்திற்கு 

முன்னர் இருந்த விடயங்களையே பலர் நினைவில் வைத்திருக்கின்றார்கள். குறிப்பாக ஜனாதிப தியும் கூட அதனையே நினைவில் வைத்திருக்கின்றார். அதனடிப்படையிலேயே அவர் பிரதமரை மாற்றியதும், நாடாளுமன்றத்தை கலைத்ததும், அந்த இரு அதிகார ங்களும் 19ம் திருத்த ச்சட்டத்தின் 

பின்னர் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பலர் நீதி மன்றம் சென்றார்கள். அவர்களில் முதன்மையானவர்களாக நாங்கள் இருந்தோம். அதனை சிலர் விமர்சிக்கிறார்கள் நாங்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்காக நீதிமன்றம் செல்வதில்லை, ஐக்கியதேசிய கட்சியை காப்பாற்றுவதற்காக நீதிமன்றம் செல்கிறோம் 

என்றெல்லாம் அந்த விமர்சனங்கள் வந்திருக்கின்றன. ஆனாலும் எங்களுடைய செயற்பாடு சிங்கள மக்கள் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி அல்லது ஜனநாயகம் மீறப்படும்போது முதலில் பாதிக்கப்படுவது தமிழ் மக்கள். 

ஆகவே அரசியலமைப்பு மீறப்படும் நிலையில் அதனை தட்டிக் கேட்கவேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமை பிரச்சினைகளுக்காக அரசியலமைப்பின் ஊடாக நிரந்தரமான தீர்வு ஒன்றிணை எதிர்பார்த்திருக்கும் நிலையில் இருக்கும் அரசியலமைப்பு 

மீறப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவ்வாறு பார்த்துக் கொண்டிருந்தால் அரசியலமைப் பின் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்த பின்னர் அந்த அரசியலமைப்பு மீறப்பட்டால் அப்போது தட்டிக்கேட்பதில் என்ன அர்த்தம் இருந்துவிடப்போகிறது? ஆகவேதான் நாங்கள் நீதிமன்ற 

செயற்பாடுகளில் முன்னுக்கு நின்றோம். மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு 3 வருடங்கள் என்ன செய்தது? என கேட்பவர்கள் மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனாலும் எங்களுடைய செயற்பாட தமிழ் மக்கள் தொடர்பில் சிங்கள மக்களிடம் இருந்த நீண் டகால கருத்தை மாற்றியிருக்கின்றது. 

தமிழ் மக்கள் நாட்டை பிரிக்க விரும்பவில்லை. நாட்டின் நலன்களுக்காக அக்கறையுடன் செயற்படுகிறார்கள் என்ற நல்லெண்ணத்தை வளர்த்திருக்கின்றது. அது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் பெரும் பங்கை வகிக்கும் என்றார். 

அமைச்சு பதவியை தமிழ்தேசிய கூட்டமைப்பு பெறுவது தொடர்பாக..

அரசாங்கத்தில் பங்காளி ஆகுங்கள் என்ற கோரிக்கை இன்றல்ல. 2015ம் ஆண்டு தொடக்கம் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஜனாதிபதியும் கூட அந்தக்கோரி க்கையினை முன்வைத்துள்ளார். அவ்வாறு இப்போதும் கேட்கிறார்கள். ஆனால் அது எங்களுடைய கொள்கையல்ல. 

தமிழ்தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதும், தமிழ் மக்கள் விரும்பும் வகையிலானதுமான தீர்வு ஒன்றினை எட்டும் வரையில் அரசாங்கத்தில் பங்காளிகள் ஆககூடாது. என்பது எங்களுடைய கட்சியின் கொள்ளை. அந்த கொள்கையில் எந்த நெகிழ்வு தன்மைக்கும் இதுவரையில் கூட்டமைப்பு இடமளித்தது இல்லை. 

மேலும் முன்னாள் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் பதவி விலகவேண்டும். என 2 வருடங்களுக்கு முன்னதாகவே நான் நாடாளுமன்றில் பேசியிருக்கிறேன். அதில் ஒளிவு மறைவுக்கு தேவையில்லை. மேலும் 2 வருடங்களுக்கு முன்னதாகவே மீள்குடியேற்ற அமைச்சை பிரதமர் கையேற்கவேண்டும் எனவும் 

நாங்கள் கேட்டிருக்கிறோம். ஆனால் அது இன்றுதான் நடந்திருக்கின்றது. எமது நோக்கம் மீள்குடி யேற்றம், மீள்கட்டுமானம் போன்ற வடகிழக்கு மாகாண மக்களுக்கு விசேடமான விடயத்தை பிரதமர் கையில் வைத்திருப்பதற்கும், அமைச்சர் ஒருவர் கையில் வைத்திருப்பதற்கும் நிறைய வேறு பாடுகள் உள்ளன. 

காரணம் என்னவென்றால் அந்த விடயங்கள் சகல அமைச்சர்களினதும் பங்களிப்புடன் செய்யப்படவேண்டியது. அது ஒரு அமைச்சர் கையில் இருந்தால் அங்கே அனைவருடைய பங்களிப்பும் அல்லது இணைந்த செயற்பாடும் அங்கே இருக்காது. ஆனால் பிரதமர் கையில் அது இருக்குமாக இருந்தால் 

அங்கு எல்லோருடைய பங்களிப்பும் அல்லது இணைந்த செயற்பாடும் நிச்சயமாக இருக்கும். இப்போது மீள்குடியேற்ற அமைச்சு பிரதமர் கையில் இருக்கின்றது. அதன் ஊடாக விசேட பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவுள்ளது. அந்த பொறிமுறைக்குள் தமிழ்தேசிய கூட்டமைப்பும் இருக்கும். 

எங்களுக்கும் அங்கு தீர்மானிக்கும் சக்தி இருக்கும். அதற்கு அவர்கள் இணங்கியிருக்கின்றார்கள். ஆகவே அந்த விடயத்தில் நாங்களும் இணங்கி செயற்படுத்த திட்டமிட்டிருக்கின்றோம். வடகிழக்கு மாகாணங்களின் மீள்குடியேற்ற அமைச்சின் செயற்பாடுகள் மிக சிறப்பாக இருக்கும் என்றார்.  

தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரச்சினைகளுக்காக நீதிமன்றம் செல்லவில்லையா..?

தமிழ் மக்களின் காணி விடுவிப்பு தொடர்பாக ஆயிரமாயிரம் வழக்குகள் நிதிமன்றில் இருக்கிறது. 2003ம் ஆண்டு தொடக்கம் அந்த வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. நான் அதற்காக வாதிடுகிறேன். அந்த வழக்குகளை செய்தவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பினரே, மேலும் சம்பூர் காணிகள் விடு விக்கப்பட்டது 

தமிழ்தேசிய கூட்டமைப்பு செய்த வழக்கினாலேயே, இதேபோல் கிறிஸ் பூதம் தொடர்பான வழக்கு, உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான வழக்குகளை செய்தது தமிழ்தேசிய கூட்டமைப்பே தவிர வேறு யாரும் இல்லை. குறிப்பாக சமஸ்டி கோர முடியும் என்ற தீர்ப்பை கூட பெற்றது தமிழ்தேசிய கூட்டமைப்பு. 

தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்கள் நலன்சார்ந்து தொடுத்த வழக்குகள், அதில் பெற்ற வெற்றிகளை கூறவேண்டுமானால் ஒரு நாள் போதாது. அவ்வளவு வழக்குகளை செய்திருக்கின்றது. அதேசமயம் எங்களை நோக்கி இந்த குற்றச்சாட்டை சுமத்துகிறவர்கள் பக் கத்திலும் அங்கு படித்த சட்டத்தரணி, 

இங்கு படித்த சட்டத்தரணி என பல சட்டத்தரணிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் ஒரு துரும்பை கூட அசைக்க முடியவில்லை. எனவே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறவர்கள் பத்திரிகை படிக்காத, அடிப்படை அறிவுகூட இல்லாத வர்களாகவே இருக்க முடியும் என்றார். 

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு தொடர்பாக..

பதவி இல்லாத நிலையில் சிலர் தாங்கள் பதவியில் இருந்திருந்தால் அப்படி செய்திருப்போம், இப்படி செய்திருப்போம் என கூறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அதனை பெரிய விடயமாக எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. அனர்த்தம் உருவானபோது அரச இயந்திரம் உடனடியாகவே செயற்பட தொடங்கிவிட்டது. 

உடனடியாக நான் அமைச்சர்  மத்தும பண்டாரவுடன் கிளிநொச்சிக்கு வந்தபோது உயிரிழப்புக்க ள் எதுவும் இடம்பெறவில்லை. அவ்வாறு உயிரிழப்புக்கள் எதுவும் இல்லாமல் வெள்ளத்தில் சிக்கியிருந்த மக்களை உடனடியாகவே முப்படையினரும் தங்கள் வளங்களையும், புலமையையும் பயன்படுத்தி 

மீட்டமை பெரிய விடயம். ஆனாலும் பின்னர் ஒரு உயிரிழப்பு இடம்பெற்றிருக்கின்றது. வெள்ளத்தி னால் இடம்பெயர்ந்த மக்களை நான் சந்தித்தபோது அவர்கள் கூறியது சமைத்த உணவுகள் வழங்கப்படுகின்றன. உடனடி தேவைகள் கிடைத்திருக்கின்றது. ஆனால் தாங்கள் திரும்பி செல்லும்போது தங்களுடைய வீடுகள், 

அழிவுகளுக்கு பரிகாரம் வேண்டும் என்பதே. அதனடிப்படையில் இப்போது அடுத்தகட்டத்தை நோக்கி போகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க சட்டத்தில் இடமில்லை. ஆனால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். 

மக்கள் பாதிக்கப்பட்டபோது அரசாங்கம் செயற்பட்ட விதம் தொடர்பாக மக்களுக்கு நல்லெண்ணம் உள்ளது. ஆகவே அந்த விடயங்களில் நாங்கள் அரசுடன் இணக்கப்பாட்டுடன் செயற்படுகின்றோம். நேற்று பிரதமர் வந்திருந்தபோது நாங்கள் அனைவரும் அங்கு சென்றிருந்தோம். 

ஆகவே அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை என்பதும், நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து செயற்படவில்லை என்பதும் அப்பட்டமான பொய். எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வெள்ளம் தொடங்கிய நாள் தொடக்கம் இன்றளவும் அங்கேயே நிற்கி ன்றார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து 

அவர்களுக்கு தேவையான உதவி திட்டங்களை தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கின்றார் என்றார்.