கனமழையினால் தொற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தருக்கு மைக்கல் நேசக்கரம் ஊடாக அவசர நிதியாக ரூபா 50,000 வழங்கி வைப்பு

ஆசிரியர் - Admin
கனமழையினால் தொற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தருக்கு மைக்கல் நேசக்கரம் ஊடாக அவசர நிதியாக ரூபா 50,000 வழங்கி வைப்பு

வடக்கு மாகாணத்தில் பொய்து வரும் கனமழையினால் முல்லைத்தீவு முத்தையன் கட்டுக்குளம் அம்மன் கோவிலடி பகுதியில் கடந்த சனிக்கிழமை நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பத்து வயது சிறுமி ஒருவர் நேற்றைய தினம் எதிர் பாராத விதமாக உயிரிழந்தார் 

கடும் வறுமை நிலை காரணமாக பிள்ளையின் இறுதி நிகழ்வுகளை மேற் கொள்வதற்குக் கூட சிரமத்தினை எதிர் கொள்ளும் ஒரு நிலையில் இக் குடும்பம் உள்ளது  எனவே இதனை கருத்தில் கொண்டு உதவிகளை பெற்றுக் கொள்ள கூடிய வழிகள் இருப்பின் உதவி செய்யுங்கள்  என்ற கோரிக்கை்கு அமைவாக மைக்கல் நேரக்கரம் ஊடாக அவசர நிதியாக  ரூபா 50,000 சிறுமியின் தந்தையிடம் இன்று வழங்கி  வைக்கப்படவுள்ளது ,  

மைக்கல் நேசக்கரம் ஊடாக சேகரிக்கப்பட்ட பல லட்சம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள்  இன்று  முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளது


சிறுமியின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு  யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு