SuperTopAds

ஈரமில்லா பேரலையால் உயிர்நீத்த உறவுகளின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி :கல்முனை

ஆசிரியர் - Editor II
ஈரமில்லா பேரலையால் உயிர்நீத்த உறவுகளின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி :கல்முனை

பாறுக் ஷிஹான்

இலங்கைத் தீவில் இயற்கையின் அகோரமாய் பல்லாயிரம் உயிர்களை காவுகொண்ட  "சுனாமி" என்னும் ஆழிப்பேரலையால்  உயிர் நீத்த  14ம் நினைவுதினம் இன்று கல்முனை பிரதேசத்தின்  சுனாமி  நினைவாலயத்தில் இடம்பெற்றது.

கல்முனை ஷைனிங் விளையாட்டு கழகத்தினர்  அஞ்சலிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

ஆழிப்பேரலையால் உயிரிழந்த நமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கல்முனை பிரதேச உறவுகளால் நினைவஞ்சலி நினைவாலயத்தில் இன்று காலை 8:50 மணியளவில் உறவுகளால் நினைவுகோரப்பட்டது. 

 கரையோர மாவட்டங்கள் பலவற்றை ஈரமல்லா பேரலையின் கோரப்பசிக்கு  பல்லாயிரக்கணக்கான  உயிர்கள் காவுகொள்ளப்பட்ட நினைவு நாள் இன்றாகும் கல்முனை பிரதேசத்தில் 1650 மேற்பட்ட உயிர்கள் இதன்போது 599 உயிர் நீத்த உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் உறவுகளின் கண்ணீர் வெள்ளத்தால் நினைவேந்தல் இடம்பெற்றன.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி இந்தோனேஷியா நாட்டின் சுமத்ரா தீவு அருகே கடலுக்குள் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உருவானது தான் சுனாமி எனும் ஆழிப்பேரலை. ஆக்ரோஷத்துடன் வானோக்கி பல அடி உயரத்துக்கு பொங்கி எழுந்த ராட்சத அலையானது  வங்கக் கடல் ஓரம் கடலோர கிராமங்களை காவு கொண்டது குறிப்பிடத்தக்கது.

நினைவஞ்சலி  நிகழ்விற்கு  கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் ஜே.கே. அதிசயராஜ், கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.ராஜன் உயிர் நீத்தவர்களின் உறவுகளும் பொதுமக்களும் மலர்தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.