கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 13 பொருட்கள் அவரமாக தேவை.. உதவ விரும்புபவா்கள் உதவலாம்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 13 பொருட்கள் அவரமாக தேவை.. உதவ விரும்புபவா்கள் உதவலாம்..

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கிளிநொச்சி மாவட்டச் செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் கோரப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள இடர் நிலை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இரவு 07.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. 

இதன்போதே குறித்த அவசர உதவு பொருட்களுக்கான கோரிக்கை விடப்பட்டுள்ளது. வெள்ள பேரிடர் அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி முற்றாக செயலிழந்துள்ளது. 

இன்னும் இரண்டு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அவதானிகள் அறிவித்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் 

நல்ன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிற்கான அடிப்படை உதவிகள் குறித்து தற்போது நடைபெற்ற வீடேச கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

அவசர தேவையான பொருட்கள்

தார்ப்பாய்கள் (Tarpaulins) - 1500

மணல் பைகள் (Sand Bags) - 10,000

நுளம்பு வலை (Mosquito Net) - 2,500

பாய் (Mat) - 5,000

நில விரிப்பு (Floor Sheet) - 1500

துவாய் (Towel) - 3000

சுகாதார கருவிகள் (Hygiene Kits) - 1500

சாக்குகள் (Sack) - 4 Roll

போர்வைகள் (Bed Sheet) - 1500

நீர் வாளிகள் (Water Bucket) - 1500

இலாம்பு விளக்குகள் (Lamp Kerosne) - 1500

குடைகள் (Umbrella) - 500

குளோரின் மாத்திரைகள் - Chlorine Tablets - 5000

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு