நாளை குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா
யாழ்.வலிகாமத்தில் பிரசித்தி பெற்ற அம்பாள் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் யாழ். குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை சனிக்கிழமை(22) சிறப்பாக இடம்பெறவுள்ளது.
தேர்த் திருவிழா நேரகால விபரம்.
காலை- 06.30 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம் ஆரம்பம்
காலை- 09 மணிக்கு வசந்த மண்டபப் பூசை
முற்பகல்-11 மணிக்கு அம்பாள் தேரில் ஆரோகணித்தல்
பிற்பகல்-12.30 மணிக்கு அம்பாள் தேரிலிருந்து அவரோகணித்தல்
இதேவேளை இவ்வாலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இந்த மாதம்-14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல்-10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்துத் தினங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.