பெரும்பான்மை வாத சிந்தனையின் அடிப்படையில் மஹிந்த எதிா்கட்சி தலைவரானாா். சம்மந்தனுக்கு வந்த காலங்கடந்த ஞானம்..

ஆசிரியர் - Editor I
பெரும்பான்மை வாத சிந்தனையின் அடிப்படையில் மஹிந்த எதிா்கட்சி தலைவரானாா். சம்மந்தனுக்கு வந்த காலங்கடந்த ஞானம்..

மஹிந்த ராஜபக்ஸவை எதிா்கட்சி தலைவராக நியமித்தமை இந்த நாட்டின் துா்ப்பாக்கிய நிலை க்கு காரணமான பெரும்பான்மை வாத சிந்தனையின் வெளிப்பாடே என்பதை மக்கள் அறிந்துள் ளாா்கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் கூறியுள்ளாா். 

மகிந்த ராஜ­பக்­சவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக சபா­நா­ய­கர் நேற்­று­முன்­தி­னம் அறி­வித்­தி­ருந்­  தார். இதற்கு சபை முதல்­வர் லக்ஸ்­மன் கிரி­யெல்ல, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­  மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன்,

சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் தலை­வர் ரவூப் ஹக்­கீம் ஆகி­யோர் எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­த­னர். மகிந்­த­வுக்கு எதிர்க்­கட்­சித் தலை­வர் பதவி வழங்­கி­ய­மை­யைக் கேள்­விக்கு உட்­ப­டுத்­தி­யி­ருந்­த­னர். இந்த நிலை­யில் எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக பதவி வகித்த இரா.சம்­பந்­தன், 

சபா­நா­ய­க­ரின் அறி­விப்பை கேள்­விக்கு உட்­ப­டுத்தி நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுச் சிறப்­பு­ரை­யாற் ­  றி­னார். அவர் தனது உரை­யில் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இரு­முறை ஏற்ப்பு..

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்­த­லின் பின்­னர் நாடா­ளு­மன்­றம் கூடி­ய­போது, எதிர்க்­கட்­சி­யில் இரண்­டா­வது கூடிய ஆச­னங்­க­ளைக் கொண்ட இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் என்ற அடிப்­ப­டை­யில் எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக ஏற்­றுக் கொண்­டீர்­கள். 

நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­யின் ஏனைய உறுப்­பி­னர்­க­ளால் இது தொடர்­பில் கேள்­வி­கள் எழுப்­பப்­பட்­டன. இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்­தில் நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­யில் அதி­கூ­டிய ஆச­னங்­க­ளைக் கொண்ட இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் 

என்ற அடிப்­ப­டை­யில் என்னை எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக மீண்­டும் ஒரு­முறை ஏற்­றுக் கொண்­டீர்­கள். அந்த முடிவை நீங்­கள் அறி­வித்­த­போது, அதுவே இறுதி முடிவு என்­றும் குறிப்­பிட்­டி­ருந்­தீர்­கள்.

எப்­ப­டிச் சாத்­தி­யம்?

மகிந்­தவை நேற்று (நேற்­று­முன்­தி­னம்) எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக நிய­மிக்­க­வேண்­டும் என்ற ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் கோரிக்­கையை ஏற்று, மகிந்­தவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக அறி­வித்­தீர்­கள். 

இரண்­டு­முறை மீள் உறுதி செய்து எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக நீங்­கள் நிய­மித்த என்னை அந்­தப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கா­மல், மகிந்­தவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக அறி­விப்­பைச் செய்­துள்­ளீர்­கள். இத­னூ­டாக, நாடா­ளு­மன்­றத்­தில் இரண்டு எதிர்க்­கட்­சித் தலை­வர் பதவி 

தக்­க­வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவே புலப்­ப­டு­கின்­றது. என்னை எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தில் உங்­க­ளுக்கு முழு­மை­யான திருப்தி இருக்­க­வில்­லையா என்ற கேள்­வியை இது எழுப்­பு­கின்­றது.

முறை­யற்ற செயல்..

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யை­விட ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி நாடா­ளு­மன்­றத்­தில் அதி­கூ­டிய ஆச­னங்­க­ளைக் கொண்­டி­ருப்­பதை கேள்­விக்கு உட்­ப­டுத்த முடி­யாது. நாடா­ளு­மன்­றத்­  தில் இரண்­டா­வது பெரும்­பான்­மைக் கட்­சி­யான 

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் என்ற அடிப்­ப­டை­யில் என்னை எதிர்க்­கட்­சித் தலை­  வ­ராக ஏற்­றுக் கொண்­டீர்­கள். ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி மற்­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி ஆகி­ய­வற்­றின் தலை­வ­ரான அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன 

உட்­பட இந்த இரு கட்­சி­ க­ளி­ன­தும் ஒரு சாரார் அர­சில் அங்­கம் வகித்­தி­ருந்­தார்­கள். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­  சேன நாட்­டின் தலை­வர். நிறை­வேற்று அதி­கா­ரத் தலை­வர். அர­சின் தலை­வர் மட்­டு­மல்ல, பல்­  வேறு அமைச்சு பத­வி­களை வகிக்­கும் ஒரு அமைச்­ச­ரா­க­வும், 

அமைச்­ச­ர­வை­யின் தலை­வ­ரா­க­வும் செயற்­ப­டு­கின்­றார். ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யில் நாடா­ளு­மன்­றத்­துக்­குத் தெரி­வான இன்­னும் பலர் அமைச்­ச­ர­வை­யில் பல்­வேறு பத­வி­களை வகித்­த­னர். அவர்­கள் எல்­லோ­ரும் நாடா­ளு­மன்­றத்­துக்கு கூட்­டுப் பொறுப்­புச் 

சொல்ல வேண்­டி­ய­வர்­கள். இத­ன­டிப்­ப­டை­யில், ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து எதிர்க்­கட்­சித் தலை­வர் தெரிவு செய்­யப்­ப­டு­வது முறை­யற்ற செய­லாக அமைந்­தி­ருக்­கும். இந்­தப் பின்­ன­ணி­யில், நாடா­ளு­மன்ற சம்­பி­ர­தாய மற்­றும் சாச­ன­மு­றைப்­படி 

நாடா­ளு­மன்­றத்­தில் இரண்­ட­வாது பெரும்­பான்­மை­யுள்ள கட்­சி­யின் தலை­வர், எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக ஏற்­றுக் கொள்­ளப்­ப­டு­வதை நடை­மு­றைப்­ப­டுத்தி என்னை நீங்­கள் எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இரண்­டு­முறை ஏற்­றுக் கொண்­டீர்­கள்.

அரசு நிய­மிக்­கப்­ப­டாத நிலை­யில் அவ­ச­ரம் ஏன்?

ஒக்­ரோ­பர் 26ஆம் திக­தி­யி­லி­ருந்து தலைமை அமைச்­சர், அமைச்­சரை மற்­றும் நாடா­ளு­மன்­றம் தொடர்­பில் பல்­வேறு சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றன. அர­ச­மைப்பு, சட்­டம் ஒழுங்கு மற்­றும் ஜன­நா­  யக விழு­மி­யங்­க­ளுக்கு அமைய உயர்­மட்­டத்­தில் நீதித்­து­றை­யால் கொடுக்­கப்­பட்ட 

தீர்ப்­புக்­க­ளின் அடிப்­ப­டை­யில் சில முடி­வு­கள் இந்த விட­யங்­க­ளில் எடுக்­கப்­பட்­டுள்­ளன. இந்­தப் பின்­ன­ணி­யில்­தான் மேற்­கு­றித்த எதிர்க்­கட்­சித் தலை­வர் பதவி தொடர்­பில் நீங்­கள் தீர்­மா­ன­ மொன்றை வழங்­கி­யி­ருக்­கின்­றீர்­கள்.

கடந்த 16ஆம் திகதி நீதி­மன்­றத் தீர்ப்­புக்கு அமை­வாக தலைமை அமைச்­சர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ ளார். ஆனால் அமைச்­ச­ரவை ஒன்றோ அல்­லது அரசோ இன்­ன­மும் முறை­யாக நிய­மிக்­கப்­ப­ட­ வில்லை. 

கடந்த 18ஆம் திக­தி­யன்று ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து நாடா­ளு­மன்­றத்­துக்­குத் தெரிவு செய்­யப்­பட்ட மூன்று உறுப்­பி­னர்­கள் சபை­யிலே கடந்து வந்து அரச தரப்­பில் அமர்ந்து கொண்­ட­னர். 

அரசு நிய­மிக்­கப்­ப­டாத இந்­தப் பின்­ன­ணி­யில் அவ­ச­ர­மாக இன்­னொ­மொ­ரு­வரை எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக நிய­மிப்­ப­தற்­கான தேவை­இல்லை என்­ப­தனை நான் வலி­யு­றுத்த விரும்­பு­கி­றேன்.

நிலமை சிக்­க­லா­கும்..

பத­வி­யில் இருக்­கும் எதிர்க்­கட்­சித் தலை­வரை நீக்­கா­மல் இன்­னொ­ரு­வரை எதிர்க்­கட்­சித் தலை­வ­ ராக்­கும் அறி­விப்பை செய்­தமை விட­யங்­களை இன்­னும் சிக்­க­லாக்­கி­யுள்­ளது. நீங்­கள் எதிர்க்­கட்­ சித் தலை­வ­ராக அறி­வித்த உறுப்­பி­னர், 

ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் பட்­டி­ய­லில் நாடா­ளு­மன்­றத்­துக்­குத் தெரிவு செய்­யப்­பட்­ டி­ருந்­தா­லும், அவர் அந்­தக் கட்­சி­யி­லி­ருந்து விலகி ஒரு மாதம் கடந்­துள்ள நிலை­யில், அவ­ரது நாடா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மை­யா­னது வெற்­றி­ட­மாக உள்­ளது 

என்ற குற்­றச்­சாட்­டும் இருக்­கின்­றது. எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக அறி­வித்த உறுப்­பி­னர், நீங்­கள் அறி­வித்த அந்த நாளில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கக்­கூட இல்லை என்­பதை உங்­க­ளின் கவ­னத்­துக்கு கொண்டு வரு­கின்­றேன்.

அர­ச­மைப்பை மதிக்­க­வில்­லையா? 

மகிந்த ராஜ­பக்­சவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக நீங்­கள் (சபா­நா­ய­கர்) அறி­விக்க எடுத்த தீர்­மா­ன­ மா­னது அவ­ச­ர­மா­க­வும் எமது அர­ச­மைப்பை மீறும் வகை­யி­லும் இருக்­கின்­ற­தா­கவே கரு­தப்­ப­டு­ கின்­றது. 

இலங்கை தனது மிக முக்­கிய சட்­ட­மான அர­ச­மைப்பை மதிக்­காத ஒரு தோல்­வியை நோக்கி நக­ ரு­கின்ற நாடாக மாறு­கின்­றதா என்ற கேள்­வியை எழுப்­பு­கின்­றது. இந்த நட­வ­டிக்­கை­யை­யும், இந்த நாடு இன்­றைக்கு இருக்­கும் இந்­தத் துர்ப்­பாக்­கிய நிலைக்­கும் மூல கார­ணம் 

பெரும்­பான்­மை­வாத சிந்­தனை என்றே, பிள­வு­ப­டாத பிரிக்க முடி­யாத இலங்கை நாட்­டில் ஐக்­கி­ யத்­து­ட­னும் சமா­தா­னத்­து­ட­னும் வாழ விரும்­பும் மக்­கள் கரு­து­கி­றார்­கள். இந்­தச் சூழ்­நி­லை­யா­னது தமிழ் மக்­க­ளும் தமிழ் பேசும் மக்­க­ளும் உள்­ள­டங்­க­லான 

அனைத்து மக்­க­ளும் சுய மரி­யா­தை­யு­ட­னும் மதிப்­பு­ட­னும் வாழ்­வ­தற்கு வழி­வ­குக்­கும் புதிய அர­ச­ மைப்பை உரு­வாக்க வேண்­டி­ய­தன் அதி முக்­கி­யத்­து­வத்தை உணர்த்தி நிற்­கி­றது – என்­றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு