மைக்கலின் நேசக்கரம் ஊடக சிறுமிக்கு மருத்துவ செலவுக்காக நிதியுதவி, மாவீரா் குடும்பத்துக்கான துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு
மைக்கலின் நேசக்கரம் ஊடக சுவிட்சர்லாந்து வாழ் உறவுகளினால் வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்பில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம் கைவேலி பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் நிரோயன் நிம்சி (வயது 8 ) சீறு நீரகத்தில் புற்று நோயினால் ஒரு சீறு நீரகம் அகற்றப்பட்டு உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் குறிந்த சிறுமிக்கு மருத்துவ செலவுக்காக ரூபா 150,000 இன்று வழங்கி வைக்கப்படவுள்ளது.
பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த கெங்கன் கிசானி அவர்களின் பிறந்தநாள் நிகழ்வை ஒட்டி எமது கிராமத்தை சேர்ந்த மாவீரா் குடும்பத்தை சேர்ந்த ஒரு மாணவிக்கும் இன்று துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.