எதிா்கட்சி தலைவா் பதவியிலிருந்து துாக்கி எறியப்பட்டாா் சம்மந்தன், மஹிந்த ராஜபக்ஸ எதிா்கட்சி தலைவரானாா். கொதிக்கும் கூட்டமைப்பு..

ஆசிரியர் - Editor I
எதிா்கட்சி தலைவா் பதவியிலிருந்து துாக்கி எறியப்பட்டாா் சம்மந்தன், மஹிந்த ராஜபக்ஸ எதிா்கட்சி தலைவரானாா். கொதிக்கும் கூட்டமைப்பு..

எதிா்கட்சி தலைவா் பதவியிலிருந்து இரா.சம்மந்தனை துாக்கி எறிந்துவிட்டு அப்பதவி மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. 

இந்த அறிவிப்பை  தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

ஆளும் கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக உறுப்பினர் கொண்ட கட்சியின் உறுப்பினருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும். 

அதற்கமைய அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

எனினும் தாமரை மொட்டு தலைவராகிய மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்குவது எப்படி என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

மஹிந்தவின் கட்சி விவகாரம் குறித்து நாளை ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியின் உறுப்பினர், 

எதிர்க்கட்சி தலைவராகலாம் என்ற சபாநாயகரின் கருத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு