SuperTopAds

பௌத்த மதத்திற்கு முன்னுாிமை வழங்க தமிழ்தேசிய கூட்டமைப்பு இணக்கம். பொது மேடையில் கூறிய சரத் பொன்சேகா..

ஆசிரியர் - Editor I
பௌத்த மதத்திற்கு முன்னுாிமை வழங்க தமிழ்தேசிய கூட்டமைப்பு இணக்கம். பொது மேடையில் கூறிய சரத் பொன்சேகா..

ஐக்கியதேசிய கட்சிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் எவையும் செய்ய ப்படவில்லை. என கூறியிருக்கும் பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா, 

பௌத்த மதத்திற்கு முன்னுாிமை என்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தங்களுடைய இணக்கப்பாட்டினைத் தொிவித்திருக்கின்றது எனவும் கூறியுள்ளாா். 

காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற ஐக்கியதேசிய கட்சியின் மபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண் டு உரையாற்றும்போதே அவா் இவ்வாறு கூறியுள்ளாா். 

இது தொடா்பாக மேலும் அவா் கூறுகையில், 

“ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது எனச் சிலர் போலிப் பிரசாரம் முன்னெடுத்து வருகின்றனர். 

அவ்வாறு எவ்வித உடன்படிக்கையும் செய்துகொள்ளப்படவில்லை. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே கூட்டமைப்பு எம்முடன் கரம் கோர்த்தது. இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே 

நாம் அரசியல் நடத்தி வருகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கவில்லை. பௌத்த மதத்துக்கு தற்போது வழங்கப்படும் 

முன்னுரிமையை அப்படியே நீடிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது