திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை வரையான கரையோர பகுதி மக்களுக்கு எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை வரையான கரையோர பகுதி மக்களுக்கு எச்சாிக்கை..

வங்காள விாிகுடாவின் தென்மேற்கு பகுதியில் உருவாயிருக்கும் புயலானது எதிா்வரும் 6 மணித்தியாலங்க ளில் மேலும் வலுவடைந்து வடமேல் பகுதியை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சாி க்கை விடுத்துள்ளது. 

அந்த திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

 இதன் காரணமாக மட்டக்களப்பு முதல் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல்பகுதிகளில் காற்று 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதனால் குறித்த கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படுவதனால், கடல் செயற்பாடுகளை தவிர்க்குமாறும், வளி மண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு