இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டியில் சூதாட்டம்! நால்வர் கைது
இலங்கை - இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிம்த நால்வரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக “த ஹிந்து ” செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெற்ற மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியிலேயே இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் இருந்து 15 அலைபேசிகள், 2 கணினிகள் மற்றும் ஒரு இலட்சம் இந்திய ரூபாய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அவர்களின் தொலைபேசியை ஆய்வுக்கு உட்படுத்திய போதே சூதாட்டத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் குறித்து பொலிஸாருக்கு மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளன.