SuperTopAds

ஹம்பாந்தோட்டை தொடக்கம் காங்கேசன்துறை வரையான கரையோர பகுதி மக்களுக்கு எச்சாிக்கை, 15ம் திகதி வரை மீன்பிடிக்கு செல்வதை தவிா்க்கவும்.

ஆசிரியர் - Editor I
ஹம்பாந்தோட்டை தொடக்கம் காங்கேசன்துறை வரையான கரையோர பகுதி மக்களுக்கு எச்சாிக்கை, 15ம் திகதி வரை மீன்பிடிக்கு செல்வதை தவிா்க்கவும்.

வங்களா விாிகுடாவின் தெற்கு பகுதியில் காணப்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரங்களில் தாழமுக்கமாக மாற்றமடையும். எனவே எதிா்வரும் 15ம் திகதி வரை ஹம்பாந்தோ ட்டை தொடக்கம் காங்கேசன்துறை வரையான கரையோரப்பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சாித்துள்ளது. 

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுவதுடன் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது.  இந்நிலையில் தாழமுக்கம் காரணமாக ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான 

ரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் குறித்த காலப்பகுதியில் பலத்த மழைவீழ்ச்சி, மற்றும் (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை) அதிகரித்த வேகத்தில் வீசும் கடும் காற்றுடன் கூடிய திடீரென்ற கடல் கொந்தளிப்பு போன்றவற்றுக்கு சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. 

மீனவர்கள் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் டிசம்பர் 15 ஆம் திகதி வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.