SuperTopAds

எல்லாம் முடிந்து விட்டது.. எதையாவது தாருங்கள் என கேட்பதுபோல் உள்ளது தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு..

ஆசிரியர் - Editor I
எல்லாம் முடிந்து விட்டது.. எதையாவது தாருங்கள் என கேட்பதுபோல் உள்ளது தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தனிநபர்கள் வழி பிழையானது என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை விமர்சிக்கும் நீங்கள், தமிழ் மக்கள் பிரச்சினைக்கு எவ்வழியாகத் தீர்வைப் பெறலாம் என தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு விளக்குவீர்களா? உங்கள் விருப்புக்குரிய வழி சரிவராதுவிட்டால் மாற்று வழித்திட்டம் யாது? 

என வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களுடன் நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளின் ஊடாக அரசியல் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றைச் சமாந்தரமாக நாம் முன்னெடுத்துச் செல்ல உத்தேசித்துள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தனிநபர்கள் வழி பிழையானது. 'எல்லாம் முடிந்துவிட்டது. எதையேனுந் தாருங்கள்' என்று கேட்பது போல் இருக்கின்றது அவ்வழி.

பேசும் முறை மாற்றமடைய வேண்டும். சரி சமனாக நின்று பேச வேண்டும். நாம் கோருவது கிடைக்காத போது மாற்று வழி என்ன என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

எமது சிந்தனைகளும் செயல்களும் இறையாசியுடன் நடைபெறுவன என தெரிவித்துள்ளார்.