SuperTopAds

கரையோர மக்களுக்கு வானிலை அவதான நிலையம் எச்சாிக்கை..!

ஆசிரியர் - Editor I
கரையோர மக்களுக்கு வானிலை அவதான நிலையம் எச்சாிக்கை..!

தென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த கற்றழுத்தப் பிரதேசம் அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து வடக்கு-வடமேற்கு திசையில் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதால் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிடுகையில்,

தென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து வடக்கு-வடமேற்கு திசையில் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி, மற்றும் (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை) அதிகரித்த வேகத்தில் வீசும் கடும் காற்றுடன் கூடிய திடீரென்ற கடல் கொந்தளிப்பு போன்றவற்றுக்கு சாத்தியம் அதிகமாக காணப்படுகின்றது.

மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுவதுடன் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

நாட்டுக்கு கிழக்காகவும் மேற்காகவும் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும்.