SuperTopAds

கிழக்கு மாகாணத்தில் இனரீதியாக வழங்கப்பட்ட வெட்டுப்புள்ளி..! ஆத்திரமடைந்த சம்மந்தன் ஆளுநருக்கு கடிதம்..

ஆசிரியர் - Editor I
கிழக்கு மாகாணத்தில் இனரீதியாக வழங்கப்பட்ட வெட்டுப்புள்ளி..! ஆத்திரமடைந்த சம்மந்தன் ஆளுநருக்கு கடிதம்..

கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பிற்காக நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் இனரீதியிலான வெட்டுப்புள்ளி வழங்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக இப்படியொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிங்களவர் 105, முஸ்லிம்கள் 120, தமிழர்கள் 130 என்ற அடிப்படையில் வெட்டுப்புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, கிழக்கு ஆளுனருக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தின் பிரதி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கௌரவ.ரோஹித்த போகொல்லாகம
ஆளுநர்
கிழக்கு ஆளுநர்
ஆளுநர் செயலகம்
உவர்மலை
திருகோணமலை

கௌரவ ஆளுனர் அவர்கட்கு,

கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பு தொடர்பாக மேற்குறித்த விடயம் தொடர்பில் எனக்கு கிடைத்துள்ள தகவல்களை பாதக விளைவுகள் எதுவும் ஏற்படும் முன்னர்,

நீங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பிற்கான போட்டிப் பரீட்சை 

கடந்த ஜூலை 14ம் திகதியன்று இடம்பெற்றிருந்தது.