82 வருட சாதனையை தகர்த்தெறிந்தார் யாசிர் ஷா

ஆசிரியர் - Admin
82 வருட சாதனையை தகர்த்தெறிந்தார் யாசிர் ஷா

பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய யாசிர் ஷா, 4-வது நாள் ஆட்ட முடிவில் 2-வது இன்னிங்சில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

2-வது விக்கெட்டை வீழ்த்தும்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுக்களை பதிவு செய்தார். யாசிர் ஷா 33 போட்டியிலேயே 200 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் விரைவாக 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 82 வருட சாதனையை தகர்த்தெறிந்துள்ளார்.

இதற்கு முன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான கிரிம்மெட் 1936-ம் ஆண்டு 36 போட்டியில் 200 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப்படைத்திருந்தார். தற்போது இந்த சாதனையை யாசிர் ஷா முறியடித்துள்ளார்.

இந்திய அணியின் அஸ்வின் 37 போட்டியில் கைப்பற்றி 3-வது இடத்தையும், 38 போட்டியில் கைப்பற்றி லில்லீஇ வக்கார் யூனிஸ் 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு