நாட்டில் சமாதானம் வேண்டி யாழ்.மாியன்னை தேவாலயத்தில் சிறப்பு நற்கருணை..

ஆசிரியர் - Editor
நாட்டில் சமாதானம் வேண்டி யாழ்.மாியன்னை தேவாலயத்தில் சிறப்பு நற்கருணை..

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை தீர்க்கப்பட்டு அமைதி ஏற்படவேண்டும் என்று பிராத்தித்து யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் சிறப்பு நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

அமலமரி தியாகிகள் சபையின் வடமாகாண முதல்வர் அருட்தந்தை எட்வின் வசந்தராஜா தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு இந்த ஆராதனை ஆரம்பமாகி மதியம் 12 மணி வரை நடைபெற்றது. 

"நாட்டில் மக்களை வழிப்படுத்தவேண்டிய அரசியல் தலைவர்கள் தமது சுயநலங்களின்  அடிப்படையில் செயற்படுகின்றனர். அவர்களின் இந்தச் செயற்பாடுகளால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.

மனிதர்களுடன் பேச்சு நடத்தி இந்த நெருக்கடிநிலைக்கு தீர்வைக் காண்பது இயலாத காரியம். அதனால் தலைவர்களுக்கு எல்லாம் தலைவரான எல்லாம் வல்ல இறைவனிடம்தான் அமைதிவேண்டிப் பிராதிக்கவேண்டும்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலையைத் தீர்ப்பதற்கு நீதித்துறை பக்கச்சார்பின்றி தீர்ப்பளிக்கவேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டிநிற்கின்றோம்" என்று ஆராதனை உரையில் அருட்தந்தை எட்வின் வசந்தராஜா பிரார்த்தித்தார்.

Radio
×