SuperTopAds

முத்தையா முரளிதரன் தொடர்பில் 22 வருடங்களுக்குப் பின் வெளிவந்த உண்மை

ஆசிரியர் - Editor II
முத்தையா முரளிதரன் தொடர்பில் 22 வருடங்களுக்குப் பின் வெளிவந்த உண்மை

இலங்கையின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து 22 வருடங்களுக்குப் பின் உண்மை வெளிவந்துள்ளது.

முத்தையா முரளிதரன் பந்தை வீசி எறிவதாக அவுஸ்திரேலிய கிரிக்கட் நடுவர்களான டெரல் ஹெயார் மற்றும் ரொஸ் எமர்சன் ஆகியோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டு முத்தையா முரளிதரனை அவமானப்படுத்தும் நோக்கிலேயே அவர் மீது சுமத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ, அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 1995ஆம் ஆண்டு பொக்சிங்கில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் முத்தையா முரளிதரனின் பந்து வீச்சில் தவறுகள் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது.

முத்தையா முரளிதரனின் பந்து வீச்சில் தவறுகள் இருப்பது அவதானிக்கப்பட்டிருப்பின், அது போட்டி ஆரம்பத்திற்கு முன்னர் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டிய பிரச்சினை எனவும், முரளிதரன் அத்தகைய சூழலுக்கு முகம்கொடுத்தமையானது, வீரர்கள் முகம்கொடுக்கக் கூடாத துரதிஷ்டவசமான நிலையெனவும் ஸ்டீவ் வோ குறிப்பிட்டுள்ளார்.