ஐக்கியதேசிய முன்னணியை ஆதாிக்கும் முடிவு தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒட்மொத்த முடிவல்ல, கூட்டமைப்பு அவசரபடுகிறது..

ஆசிரியர் - Editor I
ஐக்கியதேசிய முன்னணியை ஆதாிக்கும் முடிவு தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒட்மொத்த முடிவல்ல, கூட்டமைப்பு அவசரபடுகிறது..

ஐக்கியதேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டினை தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றிருக்கும் சகல கட் சிகளும் இணைந்து எடுத்த ஒரு முடிவல்ல. என முன்னாள் மாகாண சபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளாா். 

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமைய த்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு க ருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இ தன்போது மேலும் அவா் கூறியுள்ளதாவது. 

அன்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூடுகின்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தினை கூட்டமாமல் எடுத்த முடிவுதான் அது. அது அவசரப்பட்ட முடிவாகவே நான் கருதுகின்றேன். 

இதனால்தான் நேற்று நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமிழ் மக்களின் அடிப்படைய தேவைகள் தொடர்பான 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்று எமது ரேலோ அமைப்பின் சார்பில் 

நாங்கள் கூட்டமைப்பின் தலமையிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு