வவுணதீவு துப்பாக்கி சூட்டு சம்பவத்தை குழப்பங்களுக்கான வழியாக சிலா் பயன்படுத்த நினைக்கிறாா்கள்..

ஆசிரியர் - Editor
வவுணதீவு துப்பாக்கி சூட்டு சம்பவத்தை குழப்பங்களுக்கான வழியாக சிலா் பயன்படுத்த நினைக்கிறாா்கள்..

மட்டக்களப்பு வவுணதீவு தொடர்பில் உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்படவேண்டியதே அவசியமானது மாறாக அச் சூழலைப் பயன்படுத்தி அசாதாரண நிலமையை தோற்றுவிக்க முயல்வதாக தோன்றுகின்றது. என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , 

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண நிலமையை பயன்படுத்தி நிலமையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் உண்மை நிலமை திசை திருப்பப்படுவதுபோல் எண்ணத் தோன்றுகின்றது. எனவே வவுணதீவு கொலைச் சம்பவம் தொடர்பில் உண்மை நிலையை உடன் கண்டறியப்பட வேண்டும் 

அதேநேரம் மாறாக திசை திருப்பல் அல்லது திரிவுக்கு உட்படுத்தி அசாதாரண நிலமையின் மூலம் சிலர் இலாபமடைய எண்ணும் திட்டத்திற்கு இடமளித்துவிடக்கூடாது. இதனால் உண்மையான குற்றவாளிகள் தப்பவிடப்பட்டு முன்னாள் போராளிகள் இலக்கு வைக்கப்படுவதாக முன்னாள் போராளிகள் அஞ்சுகின்றனர். எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Radio
×